சூரியகுமார் நம்பர் ஒன்.. டி20 தரவரிசையில் புதிய மைல்கல்.. 900+ புள்ளிகள் பெற்ற ஒரே இந்திய வீரர்!

0
12392

டி20 தரவரிசையில் 900+ புள்ளிகளை பெற்ற முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

சமிபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில், சூரியகுமார் யாதவ் அரைசதம் மற்றும் சதம் அடித்தார். டி20 போட்டிகளில் இவர் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.

- Advertisement -

கடந்த 6 மாதங்களுக்குள் இந்த 3 சதங்களையும் அடித்திருகிறார். அத்துடன் 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3வது சதத்தை அடித்தபோது டி20 போட்டிகளில் 1500 ரன்களையும் கடந்துள்ளார்.

43 இன்னிங்சில் அந்த மைல்கல்லை கடந்து, அதிவேகமாக கடந்தவர்களில் 3வது இடத்தில் இருக்கிறார். 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் கடந்த முதல் வீரராகவும் இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களில் 3 அரைசதங்களுடன் 2வது இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து வந்த நியூசிலாந்து தொடர், தற்போது இலங்கை தொடர் என இரண்டிலும் கலக்கியுள்ளார்.

- Advertisement -

இதனால், டி20 உலககோப்பைக்கு முன்பு தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்ததை தக்க வைத்துள்ளார். ஆனால் இம்முறை அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.

டி20 பேட்டிங் தரவரிசையில், 908 புள்ளிகளுடன் சூரியகுமார் யாதவ் முதல் இடத்தில் இருக்கிறார். பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வெ 788 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

டி20 தரவரிசையில், இதற்குமுன் எந்தவொரு இந்திய வீரரும் 900+ புள்ளிகளை பெற்றதில்லை. அதிகபட்சமாக விராட் கோலி 897 புள்ளிகளை பெற்றிருந்தார். தற்போது அதனை முறியடித்து 908 புள்ளிகள் பெற்றுள்ளார் சாதனை படைத்துள்ளார் சூரியகுமார் யாதவ்.

ஆல்-டைம் அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 915 புள்ளிகள் பெற்றதே தற்போது வரை சாதனையாக இருக்கிறது. இரண்டாம் இடத்தில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார்.

அடுத்துவரும் நியூசிலாந்து தொடரில் சூரியகுமார் அபாரமாக செயல்படும் பட்சத்தில் அதிலும் முதலிடம் பிடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.