ஐபிஎல்-க்கு செட் ஆகவே 2-3 போட்டி எடுத்துச்சு; இப்போ செட் ஆகிட்டேன், இனி மும்பைக்கு ஏறுமுகம் மட்டுமே – கேமரூன் கிரீன் பேட்டி!

0
334

ஐபிஎல் தொடருக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள மற்றும் கற்றுக்கொள்ள எனக்கு நேரம் எடுத்துக் கொண்டது. எனக்கு செட் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இனி மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெறும் என்று பேட்டி அளித்துள்ளார் கேமரூன் கிரீன்.

ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் 40 பந்துகளில் 64 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும்.

அதன் பிறகு 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து வந்தது. சற்று நிலைத்து ஆடிவந்த மயங்க் அகர்வால் 48 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

மிடில் ஆர்டரில் ஹென்றிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 36 ரன்கள் அடித்துக்கொடுக்க, மற்ற வீரர்கள் எவரும் அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த பங்களிப்பை கொடுக்கவில்லை.

- Advertisement -

19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு ஹைதராபாத் அணி ஆல் அவுட் ஆனது. 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் 64 ரன்கள், பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் என ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் கிரீன், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் பெரும் முதல் ஆட்டநாயகன் விருது இதுவாகும்.

முதல் இரண்டு போட்டிகளில் சற்று மோசமாக செயல்பட்டதால் இவரை எதற்காக 17.5 கோடி கொடுத்து எடுத்தீர்கள் என்கிற விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய போட்டியில் ஆல்ரவுண்டர் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை குறிப்பிட்டு பேசிய கேமரூன் கிரீன்,

“முதல் இரண்டு போட்டிகள் எனக்கு கற்றுக் கொள்ளவும் ஐபிஎல்லுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும் நேரம் எடுத்துக் கொண்டது. இன்றைய போட்டியில் வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் களமிறங்கிய போது தயக்கமாகத்தான் விளையாடினேன். பின்னர் கடைசியில் திட்டமிட்டபடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் டெத் பௌலிங் வீசுவதற்கு தீவிரமாக பயிற்சிகள் செய்து வருகிறேன். அதற்கும் இன்னும் சில போட்டிகள் எடுக்கும்.

தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இந்த கண்டிஷன் எனக்கு செட் ஆகிவிட்டது என நம்புகிறேன். தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என போட்டி முடிந்த பிறகு போட்டியளித்தார்.