“இந்த கோப்பை தோனிக்கு சமர்ப்பணம்” நான் குஜராத்காரன்.. என்னோட சொந்த ஊர் மக்கள் முன்னாடி 5ஆவது கப் அடிச்சது செம்ம ஃபீல் – நாயகன் ஜடேஜா பேட்டி!

0
4506

என்னுடைய சொந்த ஊர் மக்கள் முன்பு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று பேசியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இழுபறியில் நடந்த ஐபிஎல் பைனலில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இளம் வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் சகா 54 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 21 ரன்கள் அடித்து நன்றாக பினிஷ் செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

- Advertisement -

அடுத்ததாக களமிறங்கிய சிஎஸ்கே அணி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் அடித்திருந்தபோது மழை வந்துவிட்டது. அதன் பிறகு நீண்ட நேரம் போட்டி தடைபட்டது. இறுதியாக 12.10 அளவில் 15 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சிஎஸ்கே அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் போட்டி துவங்கியது. ருத்துராஜ் மற்றும் கான்வெ இருவரும் 6.3 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர். ருத்துராஜ் 26 ரன்கள், கான்வெ 47 ரன்கள் அடித்து அவுட்டாகினர். அடுத்துவந்த துபே ஒருமுனையில் நின்று அபாரமாக ஆடிக்கொடுத்தார். ராயுடு 19 ரன்கள், ரஹானே 27 ரன்கள் அடித்து வெளியேறினர்.

சிவம் துபே 32 ரன்கள் அடித்து களத்தில் நிற்க, கடைசியில் வந்து கடைசி இரண்டு பந்துகளில் 6 மற்றும் 4 அடித்து சிஎஸ்கே அணிக்கு பினிஷ் செய்து கொடுக்க, 5ஆவது முறையாக கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி.

- Advertisement -

அபாரமாக பினிஷ் செய்துகொடுத்த ஜடேஜா, போட்டி முடிந்து பேசுகையில் கூறியதாவது:

“என்னுடைய சொந்த ஊர் மக்கள் முன்பு விளையாடி ஐந்தாவது கோப்பையை வெல்வது மிகச் சிறந்த உணர்வை கொடுக்கிறது. அதீத மக்கள் சிஎஸ்கே அணியை சப்போர்ட் செய்ய வந்திருந்தார்கள். நல்லிரவு வரை மழை எப்போது நிற்கும், எப்போது விளையாட்டை பார்க்கலாம் என்று காத்திருந்தார்கள். கடைசி வரை இருந்து சிஎஸ்கே அணியை சப்போர்ட் செய்தார்கள். அவர்களுக்கு இந்த தருணத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சிஎஸ்கே அணியில் இருக்கும் ஸ்பெஷல் மெம்பருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன். அது மகேந்திர சிங் தோனி தான். மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வளவு நேரம் என்று தொடர்ந்து எங்களுக்காக கத்தி கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தியதற்காக இந்த நன்றி.

கடைசி ஓவரில் சற்று அழுத்தமாக இருந்தாலும் மோகித் சர்மா எப்படி பந்து வீசுவார் என்பதை கணித்திருந்தேன். பந்தில் வேகம் இருக்காது ஆகையால் பேட்டை சுழற்ற வேண்டும். எப்படிப் பந்தாக இருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினேன். அதற்கேற்றவாறு முதல் பந்து சிக்சர் போனதும் நம்பிக்கை கிடைத்தது. அடுத்ததாக அழுத்தம் இன்றி அடிக்க முடியும் என்று நம்பினேன். நடந்துவிட்டது. மிகச் சிறந்த தருணம் இது.” என்றார்.