இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று அசாம் மாநிலம் கவ்ஹாத்தி மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி தாங்கள் பந்து வீசுவதாக அறிவித்தார்கள். இந்த மைதானத்தில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இரண்டாவது பந்து வீசுவது மிகவும் கடினம். எனவே முதலில் பேட்டிங் செய்தால் கட்டாயம் ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் ஜெய்ஷ்வால் மற்றும் ருத்ராஜ் இருவரும் துவக்க வீரர்களாக களம் வந்தார்கள். கடந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் இந்த போட்டியில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த இஷான் கிஷான் ஐந்து பந்துகளில் ரன்கள் ஏதும் இல்லாமல் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து ருத்ராஜ் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அரைசதம் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ருத்ராஜ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் திலக் வர்மா பொறுமையாக விளையாட இன்னொரு முனையில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த ருத்ராஜ் மெல்ல மெல்ல அதிரடிக்கு மாறினார்.
சிறப்பாக விளையாடிய அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதற்கு அடுத்து மேலும் வேகத்தை அதிகரித்து விளையாடிய ருத்ராஜ் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதறடித்தார். அவர் இறுதிவரை களத்தில் நின்றால் என்ன நடக்கும் என்று இன்று காட்டினார்.
அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்ராஜ் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். மேலும் இறுதிவரை களத்தில் நின்ற அவர் 57 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் இதுதான். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் இவர்தான். ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன் இதுதான்.
இன்னொரு முனையில் ருத்ராஜிக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடிய திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 24 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது.