“மிக மோசமான ரசிகர் கூட்டத்தின் நடுவில் இப்படியும் ரசிகர்களா?!” சிஎஸ்கே பேன்சை பாராட்டி பெங்களூர் பேன்ஸுக்கு கொட்டு வைத்த ஹர்ஷா போக்லே!

0
4723
Ipl2023

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரால் இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டிலும் நிறைய மாற்றங்களும் நன்மைகளும் நடைபெற்று இருக்கிறது என்பது உண்மை!

இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது. அவர்கள் சர்வதேச கிரிக்கெட் வாய்ப்புக்காக மட்டுமே காத்திருக்க வேண்டிய தேவையில்லை. மேலும் சிறு நகரங்கள் தாண்டி கிராமங்களில் இருந்து கூட இப்பொழுது வீரர்கள் வருகிறார்கள்.

- Advertisement -

இதேதான் இந்தியா தாண்டியும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரால் ஏற்பட்டுள்ள நன்மை. மற்ற நாடுகளின் திறமையுள்ள இளம் வீரர்களுக்கும் இங்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் அவர்கள் தங்கள் நாட்டின் அணியில் இடம் பெறும் வாய்ப்பு அமைகிறது.

இதே சமயத்தில் ரசிகர்களின் தரப்பில் மிக மோசமான சம்பவங்கள் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் லீக் சுற்றில் குஜராத் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் கில் சதம் அடிக்க குஜராத் வென்று, பெங்களூரைப் பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேற்றியது.

இதையடுத்து சமூக வலைதளத்தில் கில் உடைய சகோதரி மீது அருவருக்கத்தக்க வகையில் பெங்களூர் ரசிகர்களில் சிலர் தனிநபர் தாக்குதல்களை தொடுத்தார்கள். தற்பொழுது இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் மாறி வருகிறது.

- Advertisement -

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே மறைமுகமாக பேசி உள்ளதில் இருந்து ” நன்றி சென்னை! கண்ணியமான வரவேற்கும் மக்களை நான் சந்தித்தேன். இந்த மகிழ்ச்சிக்கு வேறுபாடாக நச்சுத்தன்மை தனிநபர் துவேஷம் போன்ற மனநிலை கொண்ட ஒரு கூட்டம் சமீபத்தில் உருவாகி வருகிறது!” என்று கூறியிருக்கிறார்.

அவரது இந்த ட்வீட்டுக்கு ரசிகர் ஒருவர் செய்துள்ள மறு ட்வீட்டில் “ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு நகரத்தையே தவறு சொல்ல முடியாது. மேலும் இப்படியான ரசிகர்கள் என்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்!” என்று கூறியிருந்தார்.

இதற்கு ட்வீட்டில் பதில் அளித்த ஹர்ஷா போகலே நேரடியாக பெங்களூரை குறிப்பிட்டு “ரிக்கி இது ஒரு நகரத்தை பற்றியது அல்ல. மிகவும் கண்ணியமான வீரர்கள் வசிக்கும் பெங்களூர் நகரத்தை நான் மிகவும் விரும்புகிறேன். ஜி ஆர் விஸ்வநாத், பிரகாஷ் படுகோன், பி எஸ் சந்திரசேகர், ராகுல் டிராவிட் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் என்று இந்தப் பட்டியல் நீளமானது. பெங்களூரு பெரிய நகரம்” என்று கூறியிருக்கிறார்!