இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது அதனைத் தொடர்ந்து இன்று 2-வது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரண்டாவது போட்டியில் ருத்ராஜ் காயம் காரணமாக விளையாடவில்லை அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷால் பட்டேலும், சஹாலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
சாம்சன் பெயருக்கு எழுந்த ரசிகர்களின் கரகோஷம்
டாஸ் போட்டு முடித்த பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் உள்ளது என்று விவரித்தார். அப்பொழுது இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடப் போகிறார் என்று கூறிய நிமிடத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கரகோஷம் எழுந்தது. கேப்டன் பாண்டியா ஒரு நிமிடம் திரும்பி பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய கரகோஷம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Watch from 1.05 – The fanbase for a player who has just played 14 International games. pic.twitter.com/mCFBgI7WnR
— Johns. (@CricCrazyJohns) June 28, 2022
இன்றைய போட்டியில் ஓப்பனிங் வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் மிக அற்புதமாக விளையாடினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி அவர் 42 பந்துகளில் ஒன்பது பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உட்பட 77 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய ரசிகர்கள் சமூக வலைகளில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 227 ரன்கள் குவித்துள்ளது.