ஐபிஎல்

5 நட்சத்திர வெளிநாட்டு வீரர்களின் ஆரம்பகால ஐபிஎல் சம்பளம்

ஐபிஎல் தொடர்களில் இந்திய வீரர்கள் எந்த அளவுக்கு அனைவராலும் விரும்பி ரசிக்க படுகிறார்களோ அதே அளவுக்கு வெளிநாட்டு வீரர்களையும் இந்திய ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.இன்னும் நன்றாக விளக்கிக் கூற வேண்டும் என்றால் இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதே அளவுக்கு எதிர்முனையில் தங்களுக்கு பிடித்த அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களாக அனைத்து இந்திய வீரர்களும் இருப்பார்கள்.

- Advertisement -

அப்படி அனைவராலும் கவரப்பட்ட மேலும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வரும் முன்னணி டாப் 5 வெளிநாட்டு வீரர்களின் ஆரம்பகால ஐபிஎல் வருமானத்தைப் பற்றி தற்போது பார்ப்போம்.

1. கிறிஸ் கெயில்: 3 கோடியே 21 லட்சம்

இவரை 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 கோடியே 21 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ஆனால் அதன் பின்னர் இவரை 2011ம் ஆண்டு நடந்த ஐபிஎல் இடத்தில் யாரும் வாங்க முன்வரவில்லை. பின்னர் பெங்களூரு அணியில் ஒரு வீரருக்கு மாற்று வீரராக வந்து ஐபிஎல் தொடரையே இவர் தன் வசம் அடக்கிக் கொண்டார் என்று கூறினால் அது மிகையாகாது. தற்பொழுது இவர் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஏபி டிவிலியர்ஸ்: ஒரு கோடியே 20 லட்சம்

டேவிட் வார்னர் போல இவரும் டெல்லி அணியில் தான் தனது ஐபிஎல் தொடரை ஆரம்பித்தார் 2008-ஆம் ஆண்டு டெல்லி அணி இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதன்பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பெங்களூர் அணிக்காக இவர் விளையாட தொடங்கினார். தற்பொழுது இவரது வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. லசித் மலிங்கா: ஒரு கோடியே 40 லட்சம்

லசித் மலிங்கா மும்பை அணியால் 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு வாங்கபட்டார். அதன்பின்னர் இவரது ஆட்டம் அற்புதமாக இருக்க ஒரு கட்டத்தில் மலிங்காவின் வருமானம் 9 கோடியே 50 லட்சம் ரூபாயாக இருந்தது. கடைசியாக இவர் மும்பை அணியில் விளையாடிய போது இவரது வருமானம் 2 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

4. டேவிட் வார்னர்: 14.7 லட்ச ரூபாய்

டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் முதல் வருமானம் 14.7 ரூபாயாகும்.அவர் ஆரம்பத்தில் டெல்லி அணிக்காக விளையாட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு வருமானம் கம்மியாக இருந்தாலும் அதன் பின்னர் அவர் ஹைதராபாத் அணியில் விளையாட தொடங்கியதற்கு பின்னர் அவரது விளையாட்டு நன்றாக அமைய எதிர்முனையில் அவரது வருமானம் நன்றாக அமைந்தது. தற்பொழுது அவருடைய வருமானம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும்.

5. கீரன் பொல்லார்ட்: 3 கோடியே 47 லட்சம்

2010 ஆம் ஆண்டு மும்பை அணி இவரை 3 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதிரடியாக விளையாட கூடிய வீரர் என்பதால் இவரை நம்பி மும்பை அணி அந்த ஆண்டு வாங்கியது. நம்பி வாங்கியது போலவே தற்பொழுது வரை மும்பை அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பரிசாக தந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றிய ஐந்து கோப்பைகளிலும் சிறு பங்கு இவருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by