“எங்களுக்கு பிளே ஆப் போக தகுதியே இல்ல” – நாடு திரும்பும் முன் டுபிளஸிஸ் உருக்கமான பேட்டி

0
11377

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாக விளங்கும் டுபிளசிஸ் கடும் மனவேதனையில் இருக்கிறார். மெகா ஏலத்திற்கு பிறகு ஆர் சி பி அணியில் விளையாடும் டுபிளசிஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லாமல் வெறுங்கையோடு செல்கிறார்.

கடந்த மூன்று முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஆர் சி பி அணி இம்முறை பிளே ஆப் க்கு முன்பே வெளியேறிவிட்டது. 198 ரன்கள் என்ற இலக்கை தற்காத்துக் கொள்ள முடியாமல் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் நாடு திரும்பும் முன் செய்தியாளருடன் பேசிய டுப்ளசிஸ் உண்மையிலேயே கடினமாக இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் கடைசி ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அதிக நம்பிக்கையில் இருந்தோம். குஜராத் போன்ற பலமான அணியை எதிர்கொள்ள போகிறோம் என்று தெரியும். ஆனால் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்ற உத்வேகத்தில் கடைசி ஆட்டத்தில் நாங்கள் களமிறங்கினோம்.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக முன்னேறி விடுவோம் என நினைத்தேன். வீரர்களும் நல்ல பார்மில் இருந்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. குஜராத் அணி போன்ற பலமான அணியை எதிர்கொள்ளும் போது நீங்கள் உங்களோட ஆட்டத்தில் 100% வெளிப்படுத்த வேண்டும்.

அதற்காக நாங்கள் மோசமாக செயல்பட்டோம் என்று சொல்ல முடியாது. கில் சிறப்பான ஆட்டத்தை விளையாடி சதத்தை அடித்தார். பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறுவது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த தொடரில் எங்களுக்கு பல விஷயங்கள் நல்லதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாடியது பாராட்டத்தக்கது. இதே போன்று சிராஜும் நன்றாக பந்து வீசினார். இதேபோன்று சில இடங்களில் நாங்கள் தொடர்ந்து சரியாக விளையாடாமல் இருந்தோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஐபிஎல் தொடரில் நாங்கள் சிறந்த அணிகளில் ஒன்று கிடையாது என்று எங்களை பார்த்தாலே எங்களுக்கே தெரியும்.

எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்த காரணத்தினால் மட்டுமே சிலர் சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் வெற்றியை நாங்கள் பெற்றோம். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லக்கூடிய தகுதி எங்களுக்கு இல்லை. நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால் இறுதியில் தோற்று விட்டோம் என டுப்ளசிஸ் மிக வேதனையுடன் கூறியுள்ளார்.

- Advertisement -