முன்னாள் வீரர்கள் திரும்ப ஆக்டிவா இருக்க சில மசாலா தேவைப்படுது – கே.எல்.ராகுல் விஷயத்தில் வெளுத்த கம்பீர்!

0
38
Gambhir

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா வந்தார். ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி என்பது இந்த வருடம் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரைக்கும்தான் என்கின்ற ஒரு குறுகிய திட்டம்தான்!

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணிக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட சரியான வீரராக இந்திய கிரிக்கெட் வாரியம் கே எல் ராகுலை பார்த்தது.

- Advertisement -

கே எல் ராகுல் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரராக இருந்தார். மேலும் பஞ்சாப் அணிக்கு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பணியாற்றி தற்பொழுது புதிதாக வந்துள்ள லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளில் திடீரென சரிந்த அவரது பேட்டிங் ஃபார்ம் காரணமாக, இந்திய டி20 அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்திருக்கிறார். தற்பொழுது அவர் ஒருநாள் கிரிக்கெட் அணியில் மட்டுமே இடம் பெற வாய்ப்புள்ளவராக இருக்கிறார். மேலும் மூன்று வடிவ இந்திய அணியிலும் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி பேட்டிங் ஃபார்ம் குறித்த கடுமையான காலகட்டத்தில் கேஎல் ராகுல் இருக்கும் நிலையில் அவர் மீது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையான தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள். தற்பொழுது முன்னாள் வீரர்களின் இப்படியான கடுமையான விமர்சனங்கள் குறித்து ஐபிஎல் லக்னோ அணிக்கு மென்டராக செயல்பட்டு வரும் கௌதம் கம்பீர் தனது கருத்தை கடுமையாகவே பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் பொழுது
” ராகுல் ஐபிஎல் போட்டிகளில் எப்படி விளையாடினார்? அவர் ஐபிஎல் தொடரில் 4, 5 சதங்கள் அடித்தவர். நீங்கள் விமர்சனங்களை வைக்கக்கூடிய அவர் ஏற்கனவே இந்த தொடரில் நான்கைந்து சதங்களை அடித்தவர் என்பதை மறக்கக்கூடாது. கடந்த ஐபிஎல் சீசனிலும் மும்பைக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். சில நேரங்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுறுசுறுப்பாக இருக்க, சில மசாலா அவர்களுக்கு தேவைப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை கே எல் ராகுல் எப்படியான வீரர் என்றால் எந்த வகையான அழுத்தத்திற்கும் அவர் தன்னை உட்படுத்திக் கொள்ள மாட்டார். ஒரு வீரரை வைத்து போட்டியை வெல்ல முடியாது. டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள 25 வீரர்களையும் வைத்துதான் ஒரு தொடரை வெல்ல முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சர்வதேச கிரிக்கெட்டும் ஐபிஎல் லும் ஒன்றுக்கொன்று வேறானவை. நீங்கள் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் ஆயிரம் ரன்களை எடுத்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியாவிட்டால் நீங்கள் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச அணியில் 15 வீரர்களுக்கு மட்டுமே இடம் இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடுகிறார்கள்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -