இந்திய கிரிக்கெட்

சூரியவன்சியை எங்கள் சைய்ம் அயூப் அப்படி அசிங்கமாக செய்திருக்க கூடாது.. அது நாகரீகம் இல்லை – கம்ரன் அக்மல் கோபம்

​ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் 15 வயதான இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷியை அவுட் செய்த பிறகு பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சாய்ம் அயூப் தேவையில்லாமல் கைக்குழந்தையைத் தாலாட்டுவது போன்ற சைகை செய்து விக்கெட்டை கொண்டாடிய விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாக சாடியுள்ளார்.

- Advertisement -

​இந்த பரபரப்பான போட்டியில் வைபவ் சூரியவன்ஷி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சாய்ம் அயூப் அந்த இளம் வீரரை கிண்டல் செய்யும் வகையில் செண்ட் ஆஃப் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

​எனினும் இந்த சம்பவத்திற்கு இந்திய அணி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி சாய்ம் அயூப்பிற்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இறுதியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.

​சாய்ம் அயூப்பின் இந்த தேவையற்ற செயலையும் கிரிக்கெட் மைதானத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் பேசும்போது, “15 வயதான ஒரு இளம் வீரரை அவுட் செய்த பிறகு சாய்ம் அயூப் கைக்குழந்தையைத் தாலாட்டுவது போல செய்த சைகை முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் நாகரிகமற்றது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் தொடர்ந்து கூறும்போது, “சாய்ம் அயூப் இது போன்ற மலிவான சோஷியல் மீடியா விளம்பரங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, முதலில் மைதானத்தில் தனது சொந்த பெர்ஃபார்மன்ஸ் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும், கிரிக்கெட் வாரியமும் வீரர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts