“எல்லாம் முடிஞ்சு போச்சு.. இங்க இருந்து இனிமேல் எதையும் மாத்த முடியாது” – பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் வேதனையான பேச்சு!

0
1987
Bangladesh

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி அதிகாரப்பூர்வமாக அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பிலிருந்து முதல் அணியாக வெளியேறியிருக்கிறது.

பங்களாதேஷ் அணி கடந்த 25 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறது. மேலும் அந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அங்கு கிரிக்கெட் உள்கட்டமைப்புகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

- Advertisement -

இப்படி எல்லாம் இருந்தும் கூட பங்களாதேஷ் அணி அதற்குரிய தரத்தில் போட்டியை வெளிப்படுத்தாமல், ஏழு போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

கிரிக்கெட் உலகில் பங்களாதேஷ் அணியை அவர்களது ரசிகர்கள் ஆதரிப்பது போல வேறு எந்த நாட்டிலும் ஆதரிக்க மாட்டார்கள். எவ்வளவு தோல்வி வந்தாலும் அவர்கள் மீண்டும் மீண்டும் தங்களது அணியை விட்டுக் கொடுக்காமல் மைதானத்திலேயே ஆதரிப்பார்கள்.

- Advertisement -

இன்று ஏழாவது போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி கொஞ்சம் கூட போட்டியை வெளிப்படுத்தாமல் பாகிஸ்தான் அணியிடம் சரணடைந்து தோற்றது. மேலும் கேப்டன் ஷாகிப் அல்ல ஹசன் பேட்டிங் மிகவும் மோசமாக இந்த தொடர் முழுக்க அமைந்திருக்கிறது.

தோல்விக்குப்பின் பேசிய பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறும்போது “நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. இந்த விக்கெட் ரன்கள் எடுப்பதற்கு நல்ல விதமாகவே இருந்தது. எங்களிடம் கடைசிப் பத்து வரையிலும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகவே இல்லை.

நாங்களும் சிறப்பாக பந்துவீசி இருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் முதல் 10 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது. நான் என்னுடைய பேட்டிங் ஆர்டரை பற்றி சிந்திக்க வேண்டும். நான் ஆரம்பத்தில் ரன்கள் எடுக்கவில்லை இதன் காரணமாக என்னுடைய நம்பிக்கை குறைந்தது.

இந்தக் கட்டத்திலிருந்து பல விஷயங்களை மாற்றுவது என்பது கடினமானது. நாங்கள் கட்டாயப்படுத்தி மாற்றங்களுக்கு முயல்கிறோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை அது நடக்காது.

நாங்கள் தொடர்ந்து பதில்களை தேடுகிறோம் ஆனால் கிடைக்கவில்லை. நாங்கள் எங்கு சென்று விளையாடினாலும் எங்களை பின்தொடர்ந்து வந்து பெரிய அளவில் ஆதரிக்கும் எங்களுடைய ரசிகர்கள்தான் எங்களுடைய பெரிய பலம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -