“ஸ்ட்ரைக்ரேட்டை எல்லாரும் பெருசா பேசுறாங்க ஆனா அது ஒரு மேட்டரே கிடையாது!” – இஷான் கிஷான் அதிரடி பேச்சு!

0
702
Ishan

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோத இருக்கிறது!

ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிப் பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் மும்பை வென்றால் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை பலப்பரிட்சை நடத்தும் என்பது ரசிகர்களை எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பான பேட்டியில் இஷான் கிஷான் நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். தனது அணி கேப்டன் ரோகித் சர்மா பற்றியும், சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பற்றி பேசி இருக்கிறார்.

இஷான் கிஷான் பேசும்பொழுது “எல்லா சூழ்நிலையிலும் மகி பாயின் அமைதி அற்புதமானது. அவரது அமைதி மற்றும் குளிர்ச்சியை நான் விரும்புகிறேன். அவர் எதையும் யோசித்துப் பிறகு முடிவெடுப்பார். தனது வீரர்களையும் பந்துவீச்சாளர்களையும் எப்படி பயன்படுத்துவது? என்று அவருக்குத் தெரியும். மேலும் அவருக்கு ஆட்டம் பற்றி எல்லாம் தெரியும்.

மகி பாய் எவ்வளவு பெரிய தலைவர்? எவ்வளவு நல்லவர்? என்பது நமக்குத் தெரிந்ததுதான். நமக்காக அவர் பல கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். நான் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவருடன் பேசுவேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

ரோகித் சர்மா பாயும் எனது இன்னிங்ஸை நான் எப்படி அணுக வேண்டும் என்று எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு நிறைய ஆதரவளிக்கிறார். நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ரோஹித் சர்மா பாய் இளைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களிலிருந்து சிறந்ததை வெளிப்படுத்த வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் எப்பொழுதும் இளைஞர்களிடம் நான் உன்னை நம்புகிறேன் என்று கூறுவார். வந்து வீச்சாளர்கள் அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவர் அவர்களிடம்
‘ நீங்கள் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் நம்பிக்கையாக தைரியமாக பந்து வீசுங்கள் நாங்கள் உங்களுக்காக ஸ்கோர் செய்வோம்!’ என்று கூறுவார்.

ரோகித் சர்மா பாயின் சிறந்த விஷயம் அவர் இளைஞர்களை எந்த அளவுக்கு ஆதரிக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆதரிப்பதுதான். சில சமயங்களில் இளைஞர்கள் பீதி அடைகிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் ரோஹித் சர்மா பாய் ஒவ்வொருவரையும் நம்பிக்கை கொடுத்து ஆதரித்து அமைதிப்படுத்துகிறார்.

டி20 கிரிக்கெட்டில் ஸ்டிரைக் ரேட் மற்றும் ஆவரேஜ் என்பது ஓவர்ரேட்டடு. அவை போட்டியின் சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான் முக்கியம். கடினமான ஆடுகளத்தில் 140 – 150 ரன்களை துரத்தினால் அங்கு 200 அல்லது 250 ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் கிடையாது!” என்று கூறி இருக்கிறார்!