“இந்திய அணி கூட உலக அணியை விளையாட விட்டாதான் சரியா வரும்!” – வாசிம் அக்ரம் பரபரப்பான கருத்து!

0
4660
Akram

13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி இருக்கிறது!

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை 24 பந்தில் 40 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆடுகளம் பேட்டிங் செய்ய சற்று சிரமமாக இருக்க விராட் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும் பொறுமையாக விளையாடி அணியை மீட்டு நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் 77 பந்துகளில் ஆட்டம் இழக்க, விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் நின்று அணியை 50 ஓவர்களில் 326 ரன்களுக்கு எடுத்துச் சென்றார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பந்துவீச்சிருக்கு வந்த இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வெறும் 83 ரன்களுக்கு சுருட்டி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெரும் வெற்றிகள் எல்லாமே அதிரடியாக இருந்து வருகிறது. கடைசியாக இலங்கைக்கு எதிராக 357 ரன்கள் குவித்து, அந்த அணியை 55 ரன்கள் சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏறக்குறைய இன்று தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் அதே முறையில் வெற்றி பெற்றிருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் லெஜெண்ட் வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” உலகின் மற்ற கிரிக்கெட் நாடுகளில் இருக்கும் எல்லா வீரர்களையும் ஒரு அணியாக சேர்த்து இந்திய அணிக்கு எதிராக விளையாட விடுவதுதான் சரியானதாக இருக்கும். இந்திய அணி பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என மூன்று துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தாலும் சரி இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரி அவர்களுக்கு அது ஒரு பிரச்சினையாகவே இருப்பதில்லை. எப்போது என்றாலும் அவர்கள் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும் மிகக் கட்டுப்பாடாக வைத்திருக்கிறார்கள்.

விராட் கோலியை ஏன் நாம் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று சொல்கிறோம் என்று காட்டினார். இதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் தற்பொழுது உச்சத்தில் இருந்து வருகிறார். ரோகித் சர்மா பேட்டிங் செய்த விதம் அழுத்தத்தை முழுவதுமாக போக்கியது. ரோகித் சர்மா நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -