“இந்தியா கூடநாங்க இப்ப விளையாடறது.. ஃப்ரீ ஹிட் மாதிரிதான்” – இங்கிலாந்து மார்க் வுட் அதிரடி பேச்சு

0
396
Wood

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் துவங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்குகிறது. இந்த ஆடுகளும் பொதுவாகவே கொஞ்சம் மெதுவாக இருக்கும் ஆனால் பெரிய அளவில் பந்து திரும்பாது.

- Advertisement -

எனவே இந்த முறை எப்படியான ஆடுகளம் இருக்கும்? வழக்கமான ஹைதராபாத் ஆடுகளம் கிடைத்தால் அது இங்கிலாந்துக்கு சாதகமாக அமையும், எனவே இந்த போட்டி குறித்து இப்படியான புள்ளி விபர எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன.

அதே சமயத்தில் நடைபெற இருக்கும் இந்த தொடர் குறித்து இந்திய அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் பெரிதாக எதுவும் இதுவரை வாய்த் திறந்து பேசவில்லை. ஆனால் இந்திய தரப்புக்கும் சேர்த்து இங்கிலாந்து தரப்பு இந்த தொடர் குறித்து நிறைய பேசி வருகிறது.

அந்த அணியில் விளையாடக்கூடிய வீரர்கள் ஆரம்பித்து, அந்த அணியின் முன்னாள் வீரர்கள் வரை பலரும் பல விதமான கருத்துக்கள் கூறி வருகிறார்கள். இதில் விராட் கோலியை சீண்ட வேண்டும் விடக்கூடாது என்கின்ற அளவுக்கு எல்லாம் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து இங்கிலாந்து அணியில் இடம் பெற்று இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் கூறும்பொழுது ” அபுதாபி பயிற்சி முகாமில் நாங்கள் நன்றாக தயாராகி விட்டோம் என்று நினைக்கிறேன். அங்கு நாங்கள் நன்றாக திரும்பும் ஆடுகளங்களை வைத்து பயிற்சி செய்தோம். மேலும் ரிவர்ஸ் ஸ்விங் பெறுவதற்காக நாங்கள் ஆடுகளத்தில் மணலைக் கொட்டியும் பயிற்சி செய்தோம். நாங்கள் அங்கு அனைத்து வசதிகளையும் பெற்றோம்.

தேவைப்படும் பொழுது இந்திய பேட்ஸ்மேன்களை அழுத்தத்தில் வைத்திருப்பதுதான் எங்களுடைய திட்டம். இப்படி அழுத்தத்தில் இருக்கும் பொழுது நாம் ஏதாவது புதிதாக உருவாக்க வேண்டும். இதே திட்டத்தைத்தான் நாங்கள் பேட்டிங் செய்யவும் வைத்திருக்கிறோம்.

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர்..எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டி அட்டவணை.. முழு தகவல்கள்

இந்தியா அரிதாகவே சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோற்பார்கள். இதனால் இது எங்களுக்கு ஒரு ஃப்ரீ ஹிட் மாதிரி. நாங்கள் அங்கு வந்துபுது முயற்சிகளை செய்து பார்க்கலாம். மேலும் நாங்கள் பாகிஸ்தானில் வந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுதாக வென்ற முதல் அணியாக சமீபத்தில் இருந்திருக்கிறோம். எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விஷயத்தை செய்து இந்தியாவில் அவர்களை வீழ்த்துவதற்கு இது நல்ல வாய்ப்பு” என்று கூறியிருக்கிறார்.