சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருக்கும் இயன் மோர்கன் – வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்

0
101

இங்கிலாந்து அணி ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது பல வருட கனவாக இருந்தது. அந்தக் கனவை 2019 ஆம் ஆண்டு இயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி நினைவாக்கியது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி கண்டது.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சற்று சுமாராக விளையாடிக் கொண்டிருக்கும் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சுமாரான பார்மில் விளையாடிக் கொண்டிருக்கும் மோர்கன்

நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்கிற கணக்கில் தொடரை வென்றது. முதலிரண்டு போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தொடர்ச்சியாக இரண்டு முறை டக் அவுட் ஆனார். மூன்றாவது போட்டியில் காயம் காரணமாக அவர் ஓய்வு பெற பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை மோர்கன் தன்னால் சிறப்பாக விளையாட முடியாமல் போனால் அல்லது தன்னுடைய ஆட்டம் அணிக்கு தடையாக இருந்தால் ஓய்வு பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருந்தார். தற்பொழுது இஞ்சுரி மற்றும் சுமாரான பார்ம் அவரது ஆட்டம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

- Advertisement -

இதனையடுத்து கூடிய விரைவில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதிகாரபூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்.