“ஜெய்ஸ்வால் விளையாடியது போதும் உள்ளே வர சொல்லுங்க” – ரோகித் கண்டிப்பு.. காரணம் என்ன?

0
2875
Jaiswal

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் மூன்றாவது நாளில் மிக வலிமையான முன்னிலையில் விளையாடி வருகிறது.

நேற்று 207 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்று இருந்து இங்கிலாந்து அணி இன்று தொடர்ந்து விளையாடி 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 29 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த தொடர் முழுவதுமே இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கொஞ்சம் சொதப்பையே வருகிறது.

ஆனால் இந்த முறை இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கீல் இருவரும் சேர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணி நல்ல முன்னிலை பெறுவதற்கு தேவையான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

கில் ஒரு முனையில் மிகப் பொறுப்பாகவும் பொறுமையாகவும் விளையாட, இன்னொரு முனையில் ஜெய்ஸ்வால் அதிரடியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை மிரட்டினார்.

- Advertisement -

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 80 பந்துகளில் அரை சதம் அடித்து, 122 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்து அசத்தினார்.

இதற்கு அடுத்து சத கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு இடுப்பு பகுதியில் லேசாக தசைப்பிடிப்புஉண்டானது. இதற்கு அடுத்து அணியின் மருத்துவர்கள் இரண்டு முறை உள்ளே வந்தும், ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்புவதற்கு மறுத்து தொடர்ந்து விளையாட விரும்பினார்.

இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கும் நிலையில், முக்கிய வீரர்களும் பலர் இல்லாத நிலையில், ஜெய்ஸ்வால் தொடர்ந்து விளையாடி காயம் பெரிதானால் பிரச்சினையாகிவிடும் என்று உணர்ந்த கேப்டன் ரோகித் சர்மா, உடனடியாக பிசியோதெரபிஸ்டை உள்ளே அனுப்பி ஜெய்ஸ்வாலை வெளியே வர வைத்தார்.

இதையும் படிங்க : 50 பந்தில் 18 ரன்.. அடுத்து 122 பந்தில் சதம்.. ஜெய்ஸ்வால் முதல் முறையாக சாதனை.. மிரட்டல் பேட்டிங்

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார். மேலும் நாளை இந்திய அணி விக்கெட்டை இழக்கும் பொழுது எப்போது வேண்டுமானாலும் உள்ளே வந்து பேட்டிங் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.