இந்திய கிரிக்கெட்

128 ரன்.. ஒரு ஓவரில் 3 விக்கெட்.. சொந்த மண்ணில் இலங்கைக்கு நடந்த ஒயிட் வாஷ்.. இங்கிலாந்து அபார வெற்றி

நேற்று இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் 128 ரன் இலக்கை மூன்றாவது t20 போட்டியில் துரத்த முடியாமல் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராக இங்கிலாந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியை வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

சாம் கரன் அபாரம்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் விக்கெட் சரிவு ஏற்பட்டது. பென் டக்கெட் 0, ஜோஸ் பட்லர் 25, ஜேக்கப் பெத்தேல் 3, டாம் பாண்டன் 7, ஹரி ப்ரூக் 4, வில் ஜேக்ஸ் 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் விளையாடிய சாம் கரன் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தார். அவர் 48 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. துஷ்மந்திர சமீரா ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஜேக்கப் பெத்தேல் மேஜிக

இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கையணி ஒரு கட்டத்தில் 112 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் தான் போட்டியின் 18-வது ஓவரை வீசுவதற்கு இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் கொண்டுவரப்பட்டார். அந்த ஓவரில் அவர் வெல்லாலகே, சமீரா மற்றும் கேப்டன் தாசன் சனகா மூவரையும் வெளியேற்றினார்.

இதையும் படிங்க : இந்திய அணி மிகவும் ஆபத்தானது.. ஆனாலும் அந்த ஒரு விஷயத்தை நினைச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு – எம்எஸ் தோனி பேட்டி

மீண்டும் இருபதாவது ஓவரை வீசிய அவர் மதிஷா தீக்ஷனா விக்கெட்டையும் கைப்பற்ற இலங்கை 116 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜேக்கப் பெத்தேல் நான்கு விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து அணி இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது.

- Advertisement -
Published by
Tags: Sl vs Eng