இன்று டி20 உலக கோப்பை தொடரில் வலிமை வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேபாள் அணி கடைசி ஓவர் வரையில் போராடி கிரிக்கெட் ரசிகர்களை இருக்கை நுணுக்கி கொண்டு வந்திருக்கிறது. இந்த போட்டியில் தட்டு தடுமாறி இங்கிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது நாளில் மொத்தம் நான்கு போட்டிகளில் சிறிய அணிகள் பெரிய அணிகளுக்கு பெரிய தலைவலியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சமீபத்தில் வந்த நேபாள் அணி முன்னால் டி20 சாம்பியன் இங்கிலாந்து அணியை சோதித்து விட்டது.
200 தொட முடியாத இங்கிலாந்து
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். மூன்றாவது இடத்தில் வந்த ஜேக்கப் 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் 32 பந்துகளில் 53 ரன்கள், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. திபேந்திர சிங் ஆரி மற்றும் நந்தன் யாதவ் இருவரும் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
பயம் காட்டிய நேபாள்
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய நேபாள் அணிக்கு குஷால் பர்தேல் 17 பந்துகளில் 29 ரன்கள், ரோகித் பரதேல் 34 பந்துகளில் 39 ரன்கள், திபேந்திர சிங் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து கடைசிக் கட்டத்தில் இவர்கள் ஆட்டம் இழந்து வெளியேற ஐந்து ஓவர்களுக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது.
இதையும் படிங்க : 182 ரன்.. சேப்பாக்கத்தில் நியூசிலாந்து வரலாற்று வெற்றி.. ஆப்கானை இரண்டு வருடம் கழித்து ரெவென்ச் எடுத்தது – 2026 டி20 உலகக் கோப்பை
இதைத்தொடர்ந்து பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த லோகேஷ் அதிரடியில் மிரட்டினார். ஆர்ச்சர் வீசிய 18வது ஓவரில் 21 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை சிறப்பாக வீசிய சாம் கரன் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் நேபாள் அணி இறுதியாக ஆறு விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இங்கிலாந்து அணி போராடி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தப்பித்து இருக்கிறது.






