59 பந்து.. குஜராத் டு இங்கிலாந்து.. பொளந்து கட்டிய பட்லர்.. வெஸ்ட் இண்டீஸ் போராடி தோல்வி

0
281
Buttler

நேற்று வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பட்லர் அதிரடியின் காரணமாக இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் இழந்துவிட்டது.

- Advertisement -

ஜோஸ் பட்லர் அபாரம்

இதைத்தொடர்ந்து முதல் டி20 போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜெமி ஸ்மித் 20 பந்தில் 38 ரன்கள், பென் டக்கேட் 4 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து கேப்டன் ஹாரி புரூக் 5 பந்தில் 6 ரன்கள், டாம் பாண்டன் 4 பந்தில் 3 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜோஸ் பட்லர் ஒரு முனையில் நின்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொத்தம் 59 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ செப்பர்டு இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இங்கிலாந்து அசத்தல் வெற்றி

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 23 பந்துகளில் 39 ரன்கள், ஜான்சன் சார்லஸ் 15 பந்துகளில் 18 ரன்கள், ரோஸ்டன் சேஸ் 20 பந்துகளில் 24 ரன்கள் என அதிகபட்சமாக எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதையும் படிங்க : பஞ்சாப் டீம்ல என்னை வச்சிக்கிட்டே.. WTCல நீங்க தோக்க போறிங்கனு பாண்டிங் சொன்னார் – மார்க்கோ யான்சன் பேச்சு

இந்த போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசிய லியாம் டௌசன் 4 விக்கெட் கைப்பற்றினார். முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -