இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 360 ரன்கள் குவித்தது. ஜானி பேர்ஸ்டோ அதிகப்பட்சமாக 162 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் முடிவில் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பிளண்டல் 88* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது இன்னிங்சிலும் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
சாமர்த்தியமாக செயல்பட்ட சாம் பில்லிங்ஸ்
நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி கொண்டிருந்த சமயத்தில் 9வது விக்கெட் அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. நீல் வாக்னருக்கு எதிராக ஜாக் லீச் ப ந்து வீசினார். அவர் வீசிய பந்து வாக்னர் பேட்டில் பட்டு பின்னே சென்றது. விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் பந்தை முதலில் பிடிக்க முயற்சி செய்தபோது, பந்து கை நழுவி கீழே விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அந்த பந்து அவரது தொடை பகுதியில் பட சாமர்த்தியமாக செயல்பட்ட பில்லிங்ஸ் அதை தனது இரண்டு கால்களால் தாங்கி கேட்ச் பிடித்தார். கைகளில் நழுவிக் கீழே விழ தெரிந்த பந்து கால்களில் மாட்டிக் கொண்டது. பார்ப்பதற்கு சற்று பிரம்மிப்பாக இருக்கும் சாம் பில்லிங்ஸ் பிடித்த அந்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
One crazy catch! 😅
— England Cricket (@englandcricket) June 26, 2022
Scorecard/clips: https://t.co/AIVHwaRwQv
🏴 #ENGvNZ 🇳🇿 @SamBillings pic.twitter.com/91U64cr51b
இரண்டாவது இன்னிங்சில் தற்பொழுது இங்கிலாந்து அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பான நிலையில் அந்த அணி தற்போது உள்ளது.போப் மற்றும் ஜோ ரூட் தற்போது அதிரடியாக விளையாடி கொண்டிருக்கின்றனர்.