கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஆசஸ் 2வது டெஸ்ட்.. தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்.. பந்துவீச்சில் தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா

ஆசஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் பிரிஸ்பேனில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக இரண்டாவது ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 334 ரன்கள் குவித்தது. இதில் ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு:

இதில் தொடக்க வீரர் ஜேக் வெதரால்ட், மார்னஸ் லாபஸ்சென் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர். இந்த தருணத்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 44 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கெரி தொடர்ந்து அதிரடி காட்டினார்.

அலெக்ஸ் கெரி 63 ரன்கள் எடுக்க யாருமே எதிர்பாராத வகையில் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மிட்செல் ஸ்டார்க் பேட்டிங்கிலும் அசத்தினார். 141 பந்துகளை எதிர் கொண்ட அவர் 77 ரன்கள் சேர்த்தார். இதில் 13 பவுண்டரிகள் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்  511 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 177 ரன்கள் பின் தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

- Advertisement -

இங்கிலாந்து போராட்டம்

இதில் தொடக்க வீரர் ஜாக்கிராலி 44 ரன்களும், பென் டக்கட் 15 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பெரும் எதிர்பார்க்கப்பட்ட ஆலி போப் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அந்த அணியின் இளம் அதிரடி வீரர் ஹாரி புரூக் 15 ரன்கள் எடுக்க ஜெமி ஸ்மித் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக 3 சாதனை.. 80 பந்துகளில் சதம் விளாசி தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் அபாரம்

இதன் மூலம் 35 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 43 ரன்கள் குறைவாகும். இதன் மூலம் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இங்கிலாந்து அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.

- Advertisement -
Published by
Tags: Ashes 2025

Recent Posts