366 ரன்.. கடைசி அரை மணி நேரத்தில் அசத்திய பாகிஸ்தான்.. திடீரென சிக்கிய இங்கிலாந்து அணி.. முல்தான் டெஸ்ட்

0
981
Pakistan

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வழக்கம் போல அதிரடியாக விளையாடி மீண்டும் முதல் இன்னிங்சில் அந்த அணிக்கு செக் வைத்திருக்கிறது.

நேற்று முல்தான் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி மீண்டும் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான அணியில் ஒட்டுமொத்தமாக பவுலிங் யூனிட் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் பாபர் அசாம் இடத்தில் கம்ரன் குலாம் அறிமுகமானார்.

- Advertisement -

அறிமுக கம்ரன் குலாமின் அசத்தல்

நேற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அறிமுக வீரராக வந்த கம்பரன் மிகச்சிறப்பாக விளையாடிய 224 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்து தொடக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 77 ரன்கள் எடுத்தார். நேற்று முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் பாகிஸ்தான் அணி எடுத்தது.

இன்று தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 366 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முகமது ரிஸ்வான் 41, அமீர் ஜமால் 37, நோமன் அலி 32 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியின் தரப்பில் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

மீண்டு வந்த பாகிஸ்தான் அணி

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி 36 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த துணை கேப்டன் ஒல்லி போப் 37 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இது தொடர்ந்து அதிரடி காட்டிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 129 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோ ரூட் 54 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1, ஹாரி புரூக் 9 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியா டெஸ்ட்ல.. அந்த 10-13 ஓவர் பெரிய வித்தியாசமா இருக்கும்.. அதனால இப்படி ரெடி ஆகறேன் – ஆஸி மிட்சல் மார்ஸ் பேட்டி

ஆட்டம் முடிய அரை மணி நேரம் இருக்க அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் அணி அரை மணி நேரத்தில் ஆட்டத்திற்குள் வந்து விட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சர்ஜித் கான் 4, நோமன் அலி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -