கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வலையை விரித்த வாசிங்டன் சுந்தர்.. பெரிய மீனை பிடித்த இந்திய அணி.. இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மதியநேர உணவு இடைவெளிக்கு முன்பு இந்திய வீரர்கள் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கின்றனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 427 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

72 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. எனினும் மழை பாதிப்பு ஏற்பட்டதால் ஆட்டத்தில் பெருவாரியான ஓவர்கள் பாதிக்கப்பட்டது. இதை அடுத்து ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்த சூழலில் அபாரமாக பந்து வீசிய ஆகாஷ் தீப் முதல் டெஸ்டில் சதம் அடித்த ஆலி போப்  விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆகாஷ் தீப் அபாரம்:

இதேபோன்று முதல் இன்னிங்சில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹாரி புரூக், ஆகாஷ் தீப்பிடம் LBW ஆனார். இதனால் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு ஸ்டோக்ஸ் ஒரு வில்லனாக கருதப்பட்டார். ஏனென்றால் இது போன்ற முக்கியமான கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ்களை ஆடி அணியை பலமுறை காப்பாற்றி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் அவருடைய விக்கெட்டை எடுக்க வேண்டும் என இந்தியாவில் தீவிரம் காட்டியது. இந்த சூழலில் மதிய உணவு இடைவெளி நெருங்கும்போது எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தப்பித்தால் போதும் என கொஞ்சம் கவன குறைவுடன் ஆடுவார்கள். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி ஓவர்களை விரைவாக வீசியது.

ஸ்டோக்ஸ் அவுட்:

குறிப்பாக ஜடேஜா தனது ஓவரை கண்ணிமைக்கும் நேரத்தில் வீசி முடித்து விட்டார். இதன் மூலம் உணவு நேர இடைவெளிக்கு முன்பு மேலும் ஒரு ஓவர் வீச வாய்ப்பு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி வாஷிங்டன் சுந்தர் மறு ஓவரை வீசினார். அப்போது ஸ்டெம்புகளை நோக்கி அவர் வீசியபோது அது ஸ்டோக்ஸ் இன் காலில் பட்டது.

இதையும் படிங்க: மழை குறித்து சுப்மன் கில்லை நேற்றே எச்சரித்த இங்கிலாந்து வீரர்.. தாமதமாக டிக்ளேர் செய்ததால் வெற்றி வாய்ப்பு பாதிப்பு?

இதை அடுத்து அவருக்கு நடுவர் எல் பி டபிள்யூ வழங்கினார். எனினும் இதனை ஸ்டோக்ஸ் ரிவ்யூ செய்ய அது அவுட் தான் என உறுதியானது. இதன் மூலம் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறது. தற்போது இந்தியாவில் வெற்றிக்கு வெறும் நான்கு விக்கெட் தான் தேவைப்படுகிறது. இன்னும் 55 ஓவர்கள் எஞ்சி இருப்பதால் நான்கு விக்கெட்டுகளை அதற்குள் இந்திய அணி எடுத்து விட முடியும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Published by