ஐபிஎல் 2025

வெறும் 88 ஓவர்.. 498 ரன்.. 3 அதிரடி சதங்கள்.. ஜோ ரூட் சரித்திர சாதனை.. இங்கிலாந்து மிரட்டலில் ஜிம்பாப்வே அணி பரிதாபம்

இன்று ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதிக்கொண்ட நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதன் முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -

தற்போது ஜிம்பாப்வே அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த ஒரு டெஸ்ட் போட்டியும் ஐந்து நாட்கள் இல்லாமல் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பின்னி எடுத்த துவக்க ஜோடி

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடியான ஜாக் கிரவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அரைசதங்கள் அடித்து தொடர்ந்து விளையாடி சதம் அடித்தும் அசத்தியது. இங்கிலாந்து அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 250 பந்துகளில் 231 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது.

சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 134 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 140 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவ்லி 171 பந்தில் 14 பவுண்டரிகள் உடன் 124 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

மூன்றாவது சதம்

இதைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களம் இறங்கிய ஒன்லி போப் தன் பங்குக்கு சிறப்பாக விளையாடி அவரும் சதம் அடித்தார். இன்று முதல் நாள் ஆட்ட முடிவின்போது ஒல்லி போப் 163 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 169 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க : கடைசி 4 ஓவர்.. குஜராத்தை சிஎஸ்கேவிடம் சிக்க வைத்த லக்னோ.. ரசிகர்களுக்கு இன்ட்ரஸ்டிங் சம்பவம்

மேலும் நான்காவது இடத்தில் வந்த ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை நிறைவு செய்து 44 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் 13 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். ஐந்தாவது இடத்தில் வந்த ஹாரி புரூக் ஆட்டம் இழக்காமல் 18 பந்தில் 9 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 498 ரன்கள் 88 ஓவர்களில் குவித்து இருக்கிறது.

- Advertisement -
Published by

Recent Posts