ஆஸி டி20.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. 3 அறிமுக வீரர்கள்.. இந்தியாவில் 2026 உலகக்கோப்பைக்கு குறி

0
222
England

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தற்போது முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டிக்கு இங்கிலாந்து பிளேயிங் லெவனை வெளியிட்டு இருக்கிறது.

2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களை வென்று அசத்திய இங்கிலாந்தின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அதைத்தொடர்ந்து வேகமாக சரிந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் 2026ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை குறிவைத்து புதிய டி20 இங்கிலாந்து அணியை உருவாக்கும் வேலையை ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

மூன்று வீரர்கள் அறிமுகம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியில் மட்டும் மொத்தம் மூன்று வீரர்கள் இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியில் அறிமுகமாகிறார்கள். மேலும் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விளையாடாத காரணத்தினால் புதிய கேப்டனாக பில் சால்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட போட்டியில் ஜோர்டான் காக்ஸ், இங்கிலாந்து அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்த ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் ஏற்கனவே சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆதில் ரஷீத் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர்

சீனியர் வீரர்களில் சுழல் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத்துக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இங்கிலாந்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் தொடர்களில் காயத்தால் பங்கேற்க முடியாத ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் இங்கிலாந்து டி20 அணிக்கு திரும்பியிருக்கிறார். மேலும் வேகப்பந்து வீச்சில் சாகிப் மஹ்மூத், ரீஸ் டாப்லி மற்றும் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :

பில் சால்ட்
வில் ஜாக்ஸ்
ஜோர்டான் காக்ஸ்
லியாம் லிவிங்ஸ்டன்
ஜேக்கப் பெத்தேல்
சாம் கர்ரன்
ஜேமி ஓவர்டன்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
ஆதில் ரஷித்
சாகிப் மஹ்மூத்
ரீஸ் டாப்லி

- Advertisement -