உலக கிரிக்கெட்

பஸ்பால் டெக்னிக் மாட்டிக்கிச்சு.. பாகிஸ்தான்கிட்ட இருக்கிற இந்த தரம் எங்ககிட்ட இல்ல.. இதுதான் தோல்விக்கு காரணம் – இங்கி நாசர் ஹுசேன் பேட்டி

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான நாசர் ஹுசைன் பாகிஸ்தான் அணி குறித்தும் இங்கிலாந்து அணியின் பலவீனம் குறித்தும் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

தொடரை வென்ற பாகிஸ்தான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரை வரிசையாக மோசமான தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டது. அணியிலிருந்து மூன்று முன்னணி வீரர்களை வெளியேற்றியது மட்டுமல்லாமல் சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷாஜித் கான் மற்றும் நோமன் அலி என்ற இரு சுழற் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது.

விளைவு அவர்கள் இருவர் விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 39 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றனர். இதன் மூலமாக டி20 உலக கோப்பையில் இருந்து மோசமான தோல்விகளை சந்தித்து வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி அந்த அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கிறது. இது பாகிஸ்தான் அணிக்கு ஒரு உத்வேகம் அளிக்கக் கூடிய எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது. சுழற் பந்துவீச்சில் எப்போதுமே தடுமாற்றம் அடையும் இங்கிலாந்து அணி இந்த முறையும் தனது பலவீனத்தை வெளிப்படுத்திய விதத்தில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

உலகத் தரமான ஸ்பின்னர்கள் அணியில் இருக்கிறார்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்து ரசிகர்களும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடையாத நிலையில் வெவ்வேறு தேர்வாளர்கள், ஆடுகளங்கள் மற்றும் இங்கிலாந்து அணியின் பஸ் பால் வியூகத்தை பாகிஸ்தான் நிர்வாகம் கண்டறிந்தது.

இதையும் படிங்க:என்ன பிளான் இது.. அடுத்த போட்டில ஆடுறாரு.. ஆனா ஆஸி தொடர்ல இல்ல.. ஆச்சரியமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா கருத்து

பாகிஸ்தான் அணியில் மிக உயர்ந்த உலகத்தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். மேலும் சுழற் பந்துவீச்சை திறமையாக சமாளிக்க கூடிய பேட்டிங் வீரர்களும் இருக்கிறார்கள். பந்து சுழலும் போது இங்கிலாந்து அணியின் பலவீனம் வெளிப்படும். பந்து நன்றாக சுழன்று வரும்போது இங்கிலாந்து சுழற் பந்துவீச்சை விளையாடாது அல்லது இங்கிலாந்து ஸ்பின் வீசும் போது பாகிஸ்தான் அதில் சிறப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts