பிரமாண்ட சிக்சர் அடித்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன்

0
171
Liam Livingstone Six

இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி லீஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 200 ரன்களை குவித்தது பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது . போட்டியின் போது இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் 121 மீட்டர் தூரம் சிக்சர் அடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் தற்போது அவர் அடித்த சிக்சர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் பொழுது 16-வது ஓவரில் வீசுவதற்காக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசிஃப் ராஃப் ஸ்லாடில் வீச ஸ்ட்ரைக்கில் நின்று கொண்டிருந்த லியம் லிவிங்ஸ்டனோ அவர் வீசிய முதல் பந்திலேயே பிரமாண்ட சிக்சர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மிக உயரத்தில் பறந்த பந்து போட்டி நடக்கும் லீட்ஸ் மைதானத்தை தாண்டி அருகில் இருந்த ரக்பி விளையாட்டு மைதானத்தில் போய் விழுந்ததுள்ளது.

- Advertisement -

இதைக்குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது டிவிட்டரில் “ இது தான் மிகப்பெரிய சிக்ஸர் “ எப்போ சார் எங்களோட பால திருப்பி தருவிங்க என வடிவேல் பாணியில் நகைச்சுவையுடன் லீட்ஸ் ரைனோஸ் அணியிடம் கேட்டுள்ளது . ரக்பி மைதானம் லீட்ஸ் ரைனோஸ் அணிக்கு சார்ந்தது .

ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக மிகப்பெரிய சிக்ஸர் என்று கூறவில்லை இருப்பினும் சமூக ஊடகங்களும் வர்ணனையாளர்களும் லிவிங்ஸ்டனைப் பாராட்டி வருகின்றனர் . லிவிங்க்ஸ்டன் அடித்த சிக்சர் 121.96 மீட்டர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமாக இருந்தால் லியாம் லிவிங்க்ஸ்டன் அடித்த சிக்ஸர் மிகப்பெரிய சிக்ஸர்களில் ஒன்றாக இருக்கும்.

இப்போட்டயில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் 39 பந்துகளில் 59 ரன்களும் லிவிங்ஸ்டன் 23 பந்துகளில் 38 ரன்களையும் விளாசினார்கள். முதல் போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடி சதம் அடித்திருந்தாலும் 233 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அரபு நாட்டில் நடக்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணிக்கான பட்டியலில் இவரது பெயரை ஆழமாக பதிவு செய்துவிட்டார்.

- Advertisement -