இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 132 ரன்கள் அவுட் ஆனது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் முதல் போட்டியில் ஆட்டம் இழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
19 ரன்னில் அவுட் ஆன ஹாரி புரூக்
கொல்கத்தாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் பட்லர், ஹாரி புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணி விரைவாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹாரி ப்ரூக் 17 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்த போது வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். கொல்கத்தாவில் அதிகமான புகை காரணமாகவே தான் பந்தை சரியாக கவனிக்காமல் ஆட்டம் இழந்ததாக ஹாரி புரூக் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
அவுட் ஆக இந்த பிரச்சனை தான் காரணம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி திறமையான பந்துவீச்சாளர் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் அன்றைய நாள் இரவில் அதிகப்படியான புகை காரணமாக அவரது பந்துவீச்சை சரியாக கணித்து விளையாட முடியவில்லை. எனவே இரண்டாவது போட்டி நடைபெறும் ஆடுகளம் காற்று சற்று தெளிவாகவும் பந்தை எளிதாக பார்க்கவும் முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் டி20 கிரிக்கெட் போட்டியில் சுழற் பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடுவது என்பது எப்போதுமே கடினமான விஷயமாகும்.
இதையும் படிங்க:106-7.. ரோகித் ஜெய்ஸ்வால் ரகானே ஸ்ரேயாஸ் சொதப்பல்.. சர்துல் தனி வீரராக அதிரடி சதம்.. மும்பை அணியை மீண்டும் காப்பாற்றினார்
இதில் குறிப்பாக நான் எப்போதுமே அதை முழுமையாக அடித்து விளையாட முயற்சிப்பதால் இது போன்ற தவறுகள் ஏற்படுகின்றன என்று நினைக்கிறேன். எனவே நான் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.






