எங்க தோல்விக்கு நான் தான் முழு காரணம்.. ஒரு தப்பு மொத்தமா மாத்திடுச்சு – ஹாரி புரூக் உருக்கமான பேச்சு

0
8
Brook

நேற்று டி20 உலகக் கோப்பை இரண்டாவது செமி பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து போராடி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி கடுமையாக போராடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இவர் பெரிய வீரராக வருவார்

இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள ஹாரி புரூக் கூறும் பொழுது ” நாங்கள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய காரணம் இந்த ஆடுகளம் புதிதாக இருப்பதால் கொஞ்சம் நின்று வரும் என்று நினைத்தோம். மேலும் கொஞ்சம் பந்து திரும்பும் என்றும் நினைத்தோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் உலகில் சிறந்தவர்கள். அவர்களிடம் சிறிய தவறு செய்தாலும் பந்து வெளியே போய்விடும்”

“ஜேக்கப் பெத்தேல் எதிர்காலத்தில் மிகப்பெரிய பெயரையும் பணத்தையும் சம்பாதிக்க போகிறார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு மிகச் சிறந்த திறமை இருக்கிறது. இன்று அது அற்புதமான முறையில் வெளிப்பட்டு இருக்கிறது. அவர் அருமையாக விளையாடினார்”

- Advertisement -

தவறு என் மேல்தான்

“அதே சமயத்தில் இந்த தொடர் முழுக்க நாங்கள் விளையாடிய விதம் குறித்து எங்கள் வீரர்கள் பெருமைப்பட வேண்டும். 250 ரன்கள் துரத்தும் பொழுது எங்கள் வீரர்கள் காட்டிய குணம் பாராட்டப்பட வேண்டியது. மற்ற அணிகள் இதை செய்திருக்குமா? என்று எனக்குத் தெரியாது”

இதையும் படிங்க : இந்திய அணியின் 11 வீரர்களை விட பும்ரா இந்த விஷயத்தில் மிகச் சிறந்து விளங்குகிறார்.. அதனால்தான் அவர் பும்ரா – ஆகாஷ் சோப்ரா

“மிக நேர்மையாக சொன்னால், நான் பெரிய தவறு செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் சாம்சன் கேட்ச்சை தவறவிட்டேன். கேட்ச் மிஸ் செய்தால் மேட்ச் மிஸ் ஆகிவிடும் என்பதற்கு சரியாக நாங்கள் தோற்று விட்டோம். எங்களுக்கு பீல்டிங்கில் விஷயங்கள் சரியாக நடக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -