இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. மேலும் கேப்டன் கில்லின் பந்துவீச்சு திட்டங்கள் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது.
இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் இரண்டாவது நாளில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன் குவித்து வருகிறது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறுவது பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இந்திய அணி பந்துவீச்சுக்கு வந்த பொழுது இந்திய வேகப்பந்து பேச்சாளர் முகமது சிராஜ் உள் வட்டத்தில் இன்னும் ஒரு கூடுதல் பீல்டரை வைக்கும்படி கேப்டன் கில்லிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் கேப்டன் கில் முகமது சிராஜின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் முகமது சிராஜ் தன்னை நம்பும் படியும் தயவு செய்து தான் சொல்வதைக் கேட்கும்படியும் கேட்டுக்கொண்டார். இருந்த போதிலும் கேப்டன் கில் அதை கேட்கவில்லை. இதன் காரணமாக முகமது சிராஜ் மிகவும் வருத்தமாக பந்து வீச சென்றார். அதற்குப் பிறகு தொடர்ந்து அவரது ஓவரில் பவுண்டரிகளாக செல்ல, அங்கிருந்தே இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது போட்டி நடைபெற்று வரும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருக்கிறது. இதன் காரணமாக விக்கெட் எப்பொழுது வேண்டுமானாலும் வெல்லலாம் என்பதால் அதிரடியாக விளையாடிய ரன் சேர்க்கும் திட்டத்தை இங்கிலாந்து கையில் எடுத்திருக்கிறது. இந்த திட்டம் அவர்களுக்கு உடனடியாக பலனும் கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீர் செஞ்ச அது நம்மள கடிக்காதுனு நம்புவோம்.. இந்த பிளேயிங் லெவன் தப்பானதுதான் – அஸ்வின் பேச்சு
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல மாடர்ன் கிரிக்கெட் ஷாட் மற்றும் இறங்கி வந்து விளையாடுவது போன்றவற்றை இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் செய்தார்கள். இதன் காரணமாக இந்திய பந்துவீச்சாளர்கள் தங்களது லைன் மற்றும் லென்த்தை மாற்றி மாற்றி வீச ஆரம்பித்தார்கள். இது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட உதவியாக அமைந்தது. இங்கிலாந்து சிறப்பான மாஸ்டர் பிளான் செய்து இந்திய பவுலிங் திட்டத்தை நொறுக்கி விட்டது!