முதல் டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து.. இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு

0
414
England

இந்திய அணிக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அதிரடியாக அறிவித்திருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. போட்டிக்கு முன்பாகவே பிளேயிங் லெவனை வெளியிடுவதை இங்கிலாந்து வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பில்லை

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் ஆர்சிபி அணிக்காக இந்த வருடம் விளையாடிய சுழல் பந்துவீச்சு இளம் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மூன்றாவது இடம் தொடர்ந்து துணை கேப்டன் ஒல்லி போப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிளேயிங் லெவனில் பேட்டிங் யூனிட்டில் துவக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிரவுலி மற்றும் பென் டக்கெட் இருக்கிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் ஒல்லி போம் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும், ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஹரி புரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள். ஏழாவது இடத்தில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் வருகிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு

இங்கிலாந்து அணியின் இந்த பிளேயிங் லெவனில் பவுலிங் யூனிட்டில் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் கிரீஸ் வோக்ஸ் மீண்டும் வாய்ப்பு பெற்று இருக்கிறார். இவருடன் அனுபவம் இல்லாத இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக பிரைடல் கார்ஸ் மற்றும் ஜோஸ் டங்க், தனி சுழல் பந்துவீச்சாளராக சோயப் பஷீர் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் அளவுக்கு இங்கிலாந்து பவுலிங் யூனிட்டுக்கு அனுபவம் இல்லை என்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக அமைகிறது. இந்திய அணிக்கு அனுபவம் இல்லாத பேட்டிங் யூனிட் இருப்பதால், அனுபவம் இல்லாத இங்கிலாந்து பவுலிங் யூனிட்டை எதிர்த்து விளையாட வசதியாக இருக்கும். மேலும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினால், அனுபவமுள்ள பவுலிங் யூனிட்டை வைத்து போட்டியை வெல்லவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs ENG முதல் டெஸ்ட்.. வலிமையான இந்திய பிளேயிங் XI.. யாருக்கு எந்த இடம்?.. முழு அலசல்

இங்கிலாந்து பிளேயிங் XI : ஜாக் கிரவுலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜெமி ஸ்மித், கிரீஸ் வோக்ஸ், பிரைடல் கார்ஸ், ஜோஸ் டங்க் மற்றும் சோயப் பசீர்.

- Advertisement -