தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது..
வெஸ்ட் இண்டீஸ் அணி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுவதற்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் அயர்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்த மாதம் 6, 8 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. மேலும் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஹாரி புரூக் கொண்டுவரப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துடன் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரை வென்றது. இந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக களம் இறங்கி விளையாடிய பில் சால்ட்டுக்கு, அவர் கேட்டுக் கொண்டதின் பேரில் டி20 தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பான ஒருநாள் அணிக்கு பில் சால்ட் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 வீரர்களில் பில் சால்ட் விளையாடவில்லை. மேலும் இதில் இன்னொரு பின்னடைவாக சிஎஸ்கே அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் தொடைப் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பின் காரணமாக விளையாடவில்லை.
இங்கிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் இல்லாவிட்டாலும் கூட அதற்கு பதிலாக புதிய வீரர்கள் யாரையும் சேர்க்கவில்லை. மீதமுள்ள 13 வீரர்களை வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு விட்டது.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் பேட்டிங் வரிசை என்ன? ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்குமா? – கில் கம்பீர் பேட்டி
இங்கிலாந்து அணி: ஹாரி புரூக் (கே), ரெஹான் அகமது, டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜேமி ஸ்மித் மற்றும் லூக் வுட்.