காத்து வாங்கும் குஜராத்.. கலக்கலாக ஆரம்பித்த நியூஸி.. முக்கிய தலைகள் இல்லை.. உலக கோப்பை அப்டேட்ஸ்!

0
367
WC

உலக கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்கியது!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் துவக்க ஆட்டத்திற்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை ஆச்சரியப்படும் விதமாக தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக தெரிந்தது!

- Advertisement -

இங்கிலாந்து தரப்பில் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து தரப்பில் நட்சத்திர வீரர் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் இருவரும் இந்த போட்டியில் சிறிய காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இங்கிலாந்து அணியில் பென் ஸ்டாக்ஸ் இடத்திற்கு ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் கேன் வில்லியம்சன் இடத்திற்கு இரட்சின் ரவீந்திர தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இன்று துவங்கிய போட்டியில் ரசிகர்களின் ஆதரவு சுத்தமாக இல்லை. ஒரு லட்சம் இருக்கைகளுக்கு மேல் கொண்ட மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

- Advertisement -

பொதுவான நாடுகள் விளையாடும் போட்டிகளுக்கு அகமதாபாத் மாதிரியான நகரங்களில் பெரிய வரவேற்பு இருக்காது. மும்பை சென்னை கொல்கத்தா மாதிரியான இடங்களில் வரவேற்புக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். மேலும் உலக கோப்பையின் துவக்க போட்டியே இப்படி அமைந்தது, தொடரை நடத்தும் இந்தியாவிற்கு கவலைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.

அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த போதிலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிகவும் கட்டுக்குள் வைத்தார்கள்.

இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் மலான் 14, விக்கெட்டை மேத்யூ ஹென்றி, ஜானி பேர்ஸ்டோ விக்கெட்டை மிட்சல் பாட்னர் இருவரும் கைப்பற்றினார்கள். முதல் பவர் பிளேவில் 51 ரன்கள் மட்டும் இங்கிலாந்து எடுத்தது ஆச்சரியமான விஷயம்தான். வழக்கமாக உலக கோப்பைக்கு நியூசிலாந்து சிறப்பாக வருவது போலவே இந்த முறையும் வந்திருக்கிறது.