கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

துலீப் கோப்பை.. ருதுராஜ் சதம் வீண் ஆகிவிட்டதா? ஆர்சிபி கேப்டன் அணி அபார ஆட்டம்

துலீப் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் நடைபெற்றிருக்கிறது. வெஸ்ட் சோன் மற்றும் சென்ட்ரல் சோன் அணிக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரில் நடைபெற்ற வருகிறது. இதில் சர்துல் தாக்கூர் தலைமையிலான வெஸ்ட் ஸோன் அணியில் நட்சத்திர வீரர் ருதுராஜ் 184 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதேபோன்று சர்துல் தாக்கூர் 64 ரன்களும் தனுஷ் கோடியன் 76 ரன்கள் குவிக்க வெஸ்ட்சோன் அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் சென்ட்ரல் சோன் அணியில் ரஜத் பட்டிதார் தவிர பெரிய ஸ்டார் வீரர்கள் யாரும் இல்லை. வெஸ்ட் ஸோனின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சென்ட்ரல் சோன் முந்தமுடியாது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ரஜத் பட்டிதார் அணி அபாரம்:

இந்த நிலையில் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே நாற்பது ரன்களிலும், கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த டேனிஷ் மலேவர் 76 ரன்களும் எடுக்க சுபாம் சர்மா 96 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் சென்ட்ரல் ஜோன் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

கீழ் வரிசையில் உபேந்தர் யாதவ் 87 ரன்களும் ஹார்ஸ் துபே 75 ரன்கள் எடுக்க தற்போது 146 ஓவர் முடிவில் சென்ட்ரல் ஜோன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 527 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் வெஸ்ட் ஸோனியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சென்ட்ரல் சோன் அணி தாண்டிவிட்டது.
நாளை ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் முதலில் ஸ்கோர் அதிகமாக இருப்பதால் சென்ட்ரல் ஜோன் அணி வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றது.

- Advertisement -

செளத் சோன் vs நார்த் சோன்:

இதேபோன்று செளத் சோன் மற்றும் நார்த் ஸோன் அணிக்கு இடையிலான ஆட்டமும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிருக்கிறது. அணியில் நாராயண் ஜெகதீசன் 197 ரன்கள் எடுக்க அந்த அணி 536 ரன்களில் ஆட்டம் இழந்தது. தற்போது நார்த் சோன் அணி 75 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: தோனி இல்ல.. இவர் தான் தன்னம்பிக்கையின் சிறந்த உதாரணம்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

தொடக்க வீரர் சுபம் காஜூரியா 122 ரன்கள் உடன் களத்தில் உள்ளார். இதேபோன்று முன்னாள் சிஎஸ்கே வீரர் நிசாந்த் சிந்து 82 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கின்றார். தற்போது அணியை விட 266 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாள் ஒரு ஆட்டம் எஞ்சியிருக்கிறது. இதில் செளத் ஜோன் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட தாண்டிவிட்டால் நார்த் சோன்  இறுதிப் போட்டிக்கு சென்று விட முடியும்.

- Advertisement -
Published by