“ஐபிஎல்-ல இந்த டீம சாதாரணமா நினைக்காதிங்க.. இந்த முறை பைனல் வருவாங்க!”- பிராட் ஹாக் கணிப்பு!

0
1441
Hogg

அடுத்த வருடம் மார்ச் தொடங்கி மே மாதம் வரையில் நடைபெற இருக்கின்ற 17வது ஐபிஎல் சீசனுக்கு மினி ஏலம் இந்த வருடம் இறுதியில் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது

மேலும் இந்தியாவில் அடுத்த வருடம் ஐபிஎல் நடக்கும் நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற காரணத்தினால், ஐபிஎல் தொடர் எங்கு நடக்கும் என்கின்ற சந்தேகம் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் எப்படியாவது இந்தியாவில் நடத்தி விடவே பெரிய அளவில் முயற்சி செய்யும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனாலும் முடிவு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.

இந்த முறை மினி ஏலத்தின் மூலமாக எல்லா அணிகளுமே நல்ல பலத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மெகா ஏலத்தில் இருந்து இரண்டு ஆண்டுகள் தங்கள் அணியின் குறை நிறைகளை எல்லா அணிகளும் சரியாக கணித்திருப்பார்கள். எனவே இந்த மினி ஏலம் எல்லா அணிகளையும் பலப்படுத்துவதாகவே அமையும்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு அணிகள் புதிதாக வந்தன. இதில் குஜராத் அணி யாரும் எதிர்பார்க்காத விதத்தில் செயல்பட்டு முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. மேலும் இந்த வருடம் இரண்டாவது ஆண்டில் இறுதிப்போட்டிக்கும் வந்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

தற்பொழுது குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பழைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல விருப்பப்பட்டு ட்ரேடிங் செய்யப்பட்டு இருக்கிறார். கேப்டன், பேட்ஸ்மேன், பவுலர், பீல்டர் என நான்கு பரிணாமங்களில் அனைத்து தூணாக இருந்தவர் விலகும் பொழுது அது பாதிப்பை உண்டாக்கவே செய்யும்.

ஆனால் இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் ” ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பி இருக்கின்ற காரணத்தினால் குஜராத் ரசிகர்கள் நீங்கள் சற்று வருத்தப்படலாம். ஆனால் ஏமாற்றம் அடைந்து விட்டதாக நினைத்து விடாதீர்கள்.

ஹர்திக் பாண்டியா உங்களுக்கு பெரிய பணத்தை டிரேடிங் மூலம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். சரியான வீரர்கள் ஏலத்தில் இருந்து வாங்கப்படுவார்கள். இதன் மூலம் அணி பலப்படும். குஜராத் இறுதிப் போட்டியில் நிச்சயம் இருக்கும்!” என்று உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார்!