“ஆப்கானை சாதாரணமா நினைக்காதிங்க.. அவங்க குறி செமி பைனல்!” – அடித்து சொல்லும் மிஸ்பா உல் ஹக்!

0
1349
Misbha

நடப்பு 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் சுவாரசியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரத்தில் அரைஇறுதிக்கான மிக முக்கியமான போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இதுவரையில் இந்திய அணி மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்பை மிக அதிகபட்சமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. ஐந்து போட்டிகளில் ஐந்தையும் வென்று இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி அடுத்து விளையாட இருக்கும் நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியுடன் இருக்கிறது. எனவே இந்திய அணியை அரைஇறுதியில் உறுதியாகப் பார்க்கலாம்.

நியூசிலாந்து அணி ஐந்தில் நான்கு ஆட்டங்களை வென்று இருக்கிறது. தற்பொழுது ஐந்தாவது ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்று ஐந்தில் நான்கு ஆட்டங்களை வென்றிருக்கும்.

ஆனால் இந்த இரண்டு அணிகளும் அடுத்தடுத்து பெரிய அணிகளுடன் விளையாட இருக்கின்ற காரணத்தினால், இவர்களுடைய இடங்கள் உறுதி என்று இந்த நிலையில் நிச்சயம் சொல்ல முடியாது.

- Advertisement -

அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் வெளியில் தெரிய அணிகளுக்கு ஏதாவது அதிர்ச்சியை கொடுத்தால் ஆச்சரியப்பட எதுவும் கிடையாது. இப்படியான காரணங்களினால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த வாரம் முக்கியமான வரமாக இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும்பொழுது “அவர்கள் தற்போது எக்ஸ்பேக்டராக மற்ற அணிகளின் மனதில் பயத்தை விதைத்து இருக்கிறார்கள். அவர்கள் இங்கிலாந்தையும் தற்பொழுது பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள விதத்தில் அடுத்து விளையாட இருக்கும் அணிகளை அழுத்தத்தில் கொண்டு சென்று இருக்கிறார்கள். அவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதோடு நம்பிக்கையாக இருப்பார்கள்.

அவர்கள் இப்படியான கிரிக்கெட்டை மிகவும் நம்பிக்கை உடன் விளையாடி வருகிறார்கள். அவர்கள் இங்கு ஒரு போட்டியை விளையாடுவதற்காக வரவில்லை. அவர்கள் செமி பைனலுக்கு செல்வதற்காக விளையாட வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்வது சரிதான் என்று நினைக்கிறேன். அவர்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது!” என்று மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்,