“பேருக்காக சாதனைக்காக விளையாடாம இருக்க.. இந்த மூனு பேர் இருந்தே ஆகனும்!” – கம்பீர் பேச்சு!

0
251
Gambhir

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, நம்பிக்கையை பெறும்விதமாக குறிப்பிட்ட விஷயத்தில் அருமையாக விளையாடி இருந்தது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினாலும் கூட, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் மூவரும் சேர்ந்து, அச்சமற்ற முறையில் விளையாடும் 180 ரன்கள் இந்திய அணியைக் கொண்டு சென்றனர்.

- Advertisement -

எல்லோரும் அச்சமற்ற முறையில் விளையாடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த அணியின் கலாச்சாரமாக மாற்றப்பட்டு வருகிறது. கேப்டன் சூரியகுமார் யாதவ் இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வலியுறுத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் எல்லோரும் அணிக்காக அப்படி விளையாடினார்கள். திலக் வர்மா முதலில் இதை ஆரம்பித்தார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட பேருக்காகவும், மற்ற சில விஷயங்களுக்காகவும் இல்லாமல் விளையாடும் பொழுது, நீங்கள் இப்படித்தான் பேட்டிங் செய்வீர்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினாலும் கூட, எத்தனை அணிகள் தங்கள் ஸ்கோர் போர்டில் 180 போட முடியும்? ஆனால் இந்தியாவின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் வந்த பேட்ஸ்மேன்கள் விதிவிலக்காக தாக்குதல் பாணியில் விளையாடினார்கள்.

பயமின்றி பேட்டிங் செய்யும்பொழுதுதான் உங்களால் இப்படி விளையாட முடியும். நீங்கள் அப்பொழுதுதான் பந்தை பார்த்து அதற்கு தகுந்தபடி ரியாக்ட் செய்வீர்கள். இது உண்மையில் நல்ல அணி அனுபவம் குறைவாக இருந்தாலும் கூட இளமையின் காரணமாக பயம் இல்லாமல் இருக்கிறார்கள்.

- Advertisement -

நீங்கள் திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ உடன் தொடர்ந்து இருந்தால் இப்படியானவற்றை பார்த்துக் கொண்டே இருக்க முடியும். மேலும் இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங்கும் இருக்கிறார். பயமற்ற முறையில் விளையாடுவதற்கு இவர்கள் மூவரும் அணியில் தேவை!” என்று கூறியிருக்கிறார்.

இதே கருத்தை வலியுறுத்தி பேசிய இந்திய முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா கூறும் பொழுது “பொதுவாக இரண்டு விக்கெட் விழுந்திருக்கும் பொழுது, கீப்பரின் தலைக்கு மேல் ஸ்கூப் விளையாட எந்த பேட்ஸ்மேன் முயல்வார்?. ஆனால் நன்றாக பந்து வீசிக் கொண்டிருந்த பந்துவீச்சாளருக்கு எதிராக திலக் வர்மா அதைச் செய்தார். இதனால் அவர் எப்படி விளையாட போகிறார் என்று காட்டிவிட்டார். டி20 கிரிக்கெட்டில் ஜெயிக்க பெரிய ரன்கள் போட வேண்டும். நேற்று அதைத்தான் இந்திய வீரர்கள் செய்தார்கள்!” என்று கூறி இருக்கிறார்!