“கேலியா பண்றிங்க.. பாபர் அசாம் இந்தியா கூடதான் அடிச்சு நொறுக்க போறார்!” – ஷேன் வாட்சன் எச்சரிக்கை பேச்சு!

0
2461
Watson

நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாகிஸ்தான் இலங்கை சந்தித்துக் கொண்ட போட்டியில், இலங்கை நிர்ணயித்த 345 ரன்களை சேஸ் செய்து, 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி உலகக் சாதனை படைத்தது!

இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வாய்ப்பு தரப்பட்ட அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சதங்கள் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்கள். இவர்கள் இருவரில் ஒருவர் ஆடாமல் இருந்திருந்தாலும் நேற்று பாகிஸ்தானால் இந்த இலக்கை எட்டி இருக்க முடியாது.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் பெரிதும் நம்பி இருக்கும் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். ஆசியக் கோப்பையில் மோசமாக விளையாடிய அவர், உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் நன்றாக விளையாடினார். ஆனால் மீண்டும் உலகக் கோப்பை ஆட்டங்கள் துவங்கவும் சொதப்பி வருகிறார்.

பாபர் அசாம் தன்னுடைய கடைசி ஐந்து இன்னிங்ஸ்களில் 10, 5, 29, 10, 17 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவருடைய கடைசி பத்து இன்னிங்ஸ்களில் ரன்கள் எடுத்த அவர், அதில் மேலான ரன்களை ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணி உடன் எடுத்திருக்கிறார். பெரிய அணிகளுக்கு எதிராக அவரது ரன் சராசரி மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து பாகிஸ்தான் அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக வருகின்ற சனிக்கிழமை அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய போட்டியாக இந்த போட்டியை குறிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இரு நாட்டு ரசிகர்கள் வரை தயாராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாபர் அசாம் மீது தொடர்ச்சியாக சமீபத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசி உள்ள ஷேன் வாட்சன் ” பாருங்கள் அவர் ஒரு கிளாஸ் பிளேயர். ஆமாம் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 30 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு இதுவே முதல் முறை. விஷயங்கள் சரியாக நடக்கவில்லை என்பது தெரியும்.

விஷயங்கள் நன்றாக நடந்தால், அவர் சந்திக்கும் முதல் இரண்டு பந்துகளிலேயே அவர் நல்ல டச்சில் இருப்பதை பார்த்தால் புரியும். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட அவர் முற்றிலும் தற்பொழுது தயாராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -