டி20 உலக கோப்பை வேணுமா?.. இத செஞ்சா மட்டும்தான் கிடைக்கும்!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு பேச்சு!

0
130
ICT

2024 ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. கடந்த முறை போல் இல்லாமல் முதல் சுற்றில் வெற்றி பெற்றால் நேரடியாக அரை இறுதிக்கு செல்ல முடியாது. இரண்டு சுற்று போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும். எனவே நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடர் எளிதாக அமையாது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பங்கேற்கும் அணிகள் முடிவாகிவிட்டதால் அனைத்து அணிகளும் தங்களுடைய தயாரிப்புகளில் மும்முரமாக இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்த விஷயத்தில் இந்திய அணிக்கு மட்டும் ஒரு வித்தியாசமான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி திரும்ப வருவார்களா? என்கின்ற கேள்வி, டி20 உலகக் கோப்பைக்கு அணியை தீர்மானிப்பதில் நிறைய பின்னடைவை கொடுத்துக் கொண்டு வருகிறது.

தற்பொழுது அவர்கள் வராவிட்டால் யாருக்கு வாய்ப்பு கிடைக்குமா அந்த வீரர்களை விளையாட வைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்கள் யார் என்றே தெரியாதது இந்திய டி20 உலகக் கோப்பை தயாரிப்புக்கு நிச்சயம் பின்னடைவுதான்.

அதேபோல் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கடைசிக்கட்ட ஓவர்களை வீசக்கூடிய இரண்டு பந்துவீச்சாளர்கள் யார் என்பதும் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஒருவர் பும்ரா என்பது உறுதி. இன்னொரு பந்துவீச்சாளருக்கான தேடுதல் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்திய அணியில் தற்போது பும்ராவை தவிர கடைசிக்கட்ட ஓவர்களை வீச நிபுணத்துவம் பெற்ற பந்துவீச்சாளர்கள் வேறு யாரும் இல்லை. இது உங்களுக்கு டி20 உலகக்கோப்பையில் பிரச்சினையாக அமையலாம். பகல் ஆட்டங்கள் நடைபெறும் பொழுது கடைசியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகலாம். அர்ஸ்தீப் சமீபக்காலங்களில் இதைச் சிறப்பாக செய்யவில்லை.

கடந்த போட்டியில் கடைசி ஓவரை அவர் சிறப்பாக வீசினார். ஆனால் ஓராண்டு காலத்திற்கு முன்பு அவர் வீசியது போல் சிறப்பாக இல்லை. ஆவேஸ் கா
ன் திட்டத்தில் வரமாட்டார்.முகேஷ் குமார் ஓகே.

அதே சமயத்தில் சமி மற்றும் சிராஜ் இருவரும் கடைசிக்கட்ட ஓவர்களை வீசுவதில் கவலை தரக்கூடியவர்கள். இந்தியா டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இந்த விஷயத்தில் வேலை செய்தே ஆகவேண்டும். இல்லையென்றால் கடினம்!” என்று கூறியிருக்கிறார்!