“2014 அப்ரிடி அடிச்ச 2 சிக்ஸர் ஞாபகம் இருக்கா?” – பாகிஸ்தான் ரசிகருக்கு பட்டாசான பதிலடி தந்த அஸ்வின்!

0
2620
Ashwin

நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் பரபரப்பான நபராக மாறி வருகிறார்!

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட உலகக் கோப்பை இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அந்த நேரத்தில் உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இரண்டு இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா அக்சர் என இடம்பெற்று இருந்தார்கள்.

இப்படி இரண்டு பேர் ஒரே மாதிரியான சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்த பொழுதும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்பொழுது பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அஸ்வினுக்கு ஆதரவாக பேசி வந்தார்கள்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அக்சர் காயம் அடைய, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இதற்குப் பின்தான் அவர் மீதான விமர்சனங்களும் வெளியில் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் மூத்த வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அஸ்வின் குறித்து விரும்பத்தகாத பல கருத்துக்களை தொடர்ச்சியாக நேற்று சமூக வலைதளத்தில் பதிவு செய்து சர்ச்சையை உண்டாக்கினார். இன்று அவரே அஸ்வின் பேசினார் முடிந்தது என்றுமுடித்திருக்கிறார்.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கடைசி ஓவரில் ஷாகித் அப்ரிடி ரவிச்சந்திரன் அஸ்வின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

தற்பொழுது இதைக் கொண்டு ரவிச்சந்திரன் அஸ்வினை சமூக வலைதளத்தில் இணைத்து பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் “ஷாகித் அப்ரிடி அடித்த இரண்டு சிக்ஸர்கள் ஞாபகம் இருக்கிறதா?!” என்று கேட்டிருந்தார்!

அவருக்கு பதில் அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் “அந்த இரண்டு ஷாட்களும் மிகச் சிறப்பானவை. அப்ரிடி மிகச் சிறப்பாக பந்துகளை அடிக்கக்கூடிய ஸ்ட்ரைக்கர்!” என்று திருப்பிப் பெருந்தன்மையாக பதில் கூறியிருந்தார்.

இந்த பதிலை கேட்ட பாகிஸ்தான் ரசிகர் உடனடியாக தனது தொனியை மாற்றிக் கொண்டு “உங்களை நேசிக்கிறேன்.. எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி. நீங்கள் உண்மையில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்!” என்று திருப்பி பாராட்டி இருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது!