ஐபிஎல் மட்டும்தான் விளையாடுகிறீர்களா? அப்போ நாடு? – கபில்தேவ் காரசார கேள்வி!

0
88
Kapil Dew

இந்திய அணிக்காக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற முதல் கேப்டன் கபில்தேவ். ஹரியானா சிங்கம் என்று அழைக்கப்படும் இவர்தான் இது நாள் வரையில் இந்திய அணி கண்டுபிடித்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் மிக மிக முக்கியமானவர். இவர் செய்துள்ள சாதனைகளுக்கு பக்கத்தில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடையாது. மேலும் களத்தில் எதையும் சாதிக்கக் கூடிய மேட்ச் வின்னர் இவர். ஒரு அணியை கட்டுக்கோப்பாக நம்பிக்கை இழக்க வைக்காமல் வழி நடத்துவதிலும் மிகச் சிறந்த கேப்டன்!

தற்போது இவர் டி20 லீக் க்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் கிரிக்கெட் போட்டிகளும் நாளடைவில் மறைந்துவிடும் என்று அஞ்சுகிறார். ஒருநாள் போட்டிகள் கடைசியும் உலகக்கோப்பை யோடு சுருங்கி விடுமோ என்றும் அஞ்சுகிறார்.

- Advertisement -

கபில்தேவ் டி20 லீக்குகளுக்கு எதிரானவர் கிடையாது. உலகின் நம்பர் ஒன் டி20 லீக் ஆன ஐபிஎல் தொடருக்கு முன்னோடி இவர் கொண்டு வந்த ஐசிஎல் தொடர் தான். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதை தடை செய்து விட்டது. அதில் பங்கெடுத்த வீரர்களுக்கும் தடைவிதித்தது. இதனால் கபில்தேவால் அந்த லீக்கை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

கபில்தேவ் அச்சப்படுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை, ஏனென்றால் உலகின் முன்னணி கிரிக்கெட் நாடுகள் எல்லாமே தனிப்பட்ட டி20 லீக்குகளை நடத்தி வருகின்றன. இதில்லாமல் தற்போது சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒரு புதிய டி20 லீக்கையும், யுஎஇ ஒரு டி20 லீக்கையும் கொண்டு வந்திருக்கிறது. இதனால் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு நேரம் கிடைப்பது சுருங்கிக்கொண்டே வருகிறது.

இதுபற்றி கபில்தேவ் கூறும்பொழுது ” ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ரெண்டு வருவதாக நான் கருதுகிறேன். மேலும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி இரண்டையும் காப்பாற்றும் பொறுப்பு ஐசிசி-க்கு உள்ளது. கிரிக்கெட் ஐரோப்பாவின் கால்பந்து போல மாறப்போகிறதா? கால்பந்து வீரர்கள் தனியாக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. கிளப் போட்டிகளில் மட்டுமே தான் அதிகம் விளையாடுகிறார்கள். நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பையில் மட்டுமே தனது நாட்டு அணிக்காக விளையாடுகிறார்கள். இந்த முறையில் கிரிக்கெட்டும் மாறப்போகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கால்பந்தைப் போல கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் பிக்பாஸ் போன்ற தொடர்களில் தான் விளையாடுவார்களா? அப்படி என்றால் கிரிக்கெட் போட்டிகள் உலககோப்பையோடு சுருங்கி விடுமா? இந்த நிலைமை வந்தால் எப்படி ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்த முடியும்? ஐசிசி அதிக சர்வதேச போட்டிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். கிளப் போட்டிகளுக்கு அல்ல” என்று கூறினார்!