BCCI சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆஸ்திரேலியாவை விட 28 மடங்கு அதிகம்.. மலைக்க வைக்கும் தொகை!

0
455
BCCI

இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக மாறி வந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வளர்ச்சி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

மேலும் எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்தக்கூடிய பெரிய அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருக்கும். இது மட்டும் இல்லாமல், பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கிரிக்கெட் முதன்மையான விளையாட்டாக இருப்பதால், எக்கச்சக்க இளம் திறமைகள் தற்காலத்தில் உருவாகி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணத்தால் தற்போதைய கிரிக்கெட்டின் பவர் ஹவுஸ் ஆக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து கிரிக்கெட் அதிகாரத்தை யாராலும் பறிக்கவே முடியாது. யாரிடமும் இவ்வளவு ரசிகர்களும் இவ்வளவு வீரர்களும் கிடையாது. அதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருமானத்தின் பக்கத்தில் எந்த கிரிக்கெட் வாரியங்களும் கிடையாது.

டி20 கிரிக்கெட் அறிமுகமாகிய பிறகு, அதை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொண்டதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடர் மூலம் உச்சத்தை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமத்தை கொடுத்ததின் மூலம், விளையாட்டு உலகில் இரண்டாவது பெரிய ஒலிபரப்பு உரிமமாக அது மாறியது. காலம் செல்ல செல்ல ஐபிஎல் ஆதிக்கம் உலக அளவில் மிகப்பெரியதாக விரிவடையும்.

- Advertisement -

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் அதிக சம்பளத்தை வீரர்களுக்கு கொடுக்கக்கூடிய வாரியமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இருந்தது. இவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஆதிக்கம் செலுத்தியது. தற்பொழுது இந்த இரண்டு நாட்டு வீரர்களுமே இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியை விட 28 மடங்கு அதிகம் என்பதுதான், இந்திய கிரிக்கெட் வாரியம் உலக கிரிக்கெட்டில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை குறிக்கும் சாட்சியாக இருக்கிறது.

இந்தியா 18,760 கோடி
ஆஸ்திரேலியா 658 கோடி
இங்கிலாந்து 492 கோடி
பாகிஸ்தான் 458 கோடி
பங்களாதேஷ் 425 கோடி
தென் ஆப்பிரிக்கா 392 கோடி
இலங்கை 166 கோடி
வெஸ்ட் இண்டீஸ் 125 கோடி
நியூசிலாந்து 75 கோடி

- Advertisement -