நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளையும் வென்று புள்ளி பட்டியலில் வலிமையாக முதலிடத்தில் இருக்கிறது.
மேலும் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்து விட்டது. புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்திலிருந்து லீக் சுற்று முடிப்பதற்கு இந்திய அணி எதிர்பார்க்கும்.
இதற்கு அடுத்து இந்திய அணி இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி கொஞ்சம் சவாலாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணி அடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நவம்பர் இரண்டாம் தேதி விளையாடுகிறது. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா எனக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 5ஆம் தேதி விளையாடுகிறது.
நவம்பர் 5ஆம் தேதி இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஈடன் கார்டன் மைதானத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்பொழுது இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்து, சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்திருக்கும் 49 சதங்கள் என்கின்ற சாதனையை விராட் கோலி முறியடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக அவரது பிறந்த நாளில் அது அமைந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலியின் பிறந்தநாளுக்கு முகமது ரிஸ்வானின் வாழ்த்து என்னவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு முகமது ரிஸ்வான் மிகவும் நெகிழ்ச்சியான பதிலை கூறியிருக்கிறார்.
இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய முகம்மது ரிஸ்வான் “நான் அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன். அவருடன் எப்போதும் கடவுள் இருப்பார். அவர் தன்னுடைய 49 மற்றும் 50 ஆவது சதங்களை பிறந்த நாளில் எட்டுவார்!” என்று தன்னுடைய வாழ்த்தைக் கூறியிருக்கிறார்!
•Question:- Virat Kohli will play at Eden gardens on his birthday, do you have any wish for him?.
— CricketMAN2 (@ImTanujSingh) October 30, 2023
•Mohammad Rizwan:- I have lot of love for him. God be willing, may he gets his both 49th & 50th ODI Hundreds". pic.twitter.com/IucYoebhPk






