பாபர் ஆஸம் கூட கோலியை ஒப்பிடாதிங்க… ஏன்னா பாபர் ஆஸம்.. சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரர்!

0
1292
Virat

விளையாட்டை பொறுத்தவரை எப்பொழுதும் ஒரு காலகட்ட வீரரை இன்னொரு காலக்கட்ட வீரருடன் ஒப்பிட்டுப் பார்த்து மதிப்பீடு செய்வது மற்றும் அந்த மதிப்பீடுகளால் விவாதங்களை உருவாக்குவது. இல்லை சர்ச்சைக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்று.

இந்த விஷயத்தில் விளையாட்டில் கிரிக்கெட்டும் விதிவிலக்கானது கிடையாது. நம்முடைய சமகாலத்தில் நாம் பார்த்து சச்சின் மற்றும் லாராவை வைத்து பலர் நிறைய ஒப்பீடுகள் செய்து மதிப்பீடுகளை வழங்கிக் கொண்டிருப்பார்கள். இதில் நிறைய விவாதங்களும் சர்ச்சையான கருத்துகளும் எழுந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

தற்போது இந்தியாவைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் சச்சின் உடன் விராட் கோலியை ஒப்பிட்டு மிகப்பெரிய விவாதங்களும் சர்ச்சையான கருத்துக்களும் ஒருபுறம் போய்க் கொண்டிருக்கின்றன. இரண்டு தரப்பு ரசிகர்களும் பிரிந்து சமூக வலைதளத்தில் மோதிக் கொள்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.

உலகளவில் என்று எடுத்துக் கொண்டால் விராட் கோலி உடன் பாபர் ஆசமை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வது ஒருபக்கம் என்றால், இதை ஒட்டி சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை கிளப்பி விட்டு சமூக வலைதளத்தில் மோதிக் கொள்வது என்று இன்னொரு பக்கம் செல்கிறது.

தற்பொழுது இப்படியான ஒரு விஷயத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அக்யூப் ஜாவித் கூறியிருக்கிறார். அதாவது அவர் பாபர் ஆசமை விராட் கோலி உடன் ஒப்பிட கூடாது என்கிறார். என்ன காரணத்திற்காக என்று பார்ப்போம்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நீங்கள் விராட் கோலியை பாபருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், விராட் கோலி சிறப்பாக செயல்பட்ட சில சீசன்கள் மட்டும்தான் இருக்கிறது. விராட் கோலிக்கு ஒரு சிறந்த சீசன் இருக்கும் பின்பு அது குறையும். அவர் அவருடைய சீசனில் சிறந்த வீரர். ஆனால் பாபர் ஆசம் எப்பொழுதும் சிறந்த வீரர். பாபர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.

பாபருக்கு கேப்டனாக அவரது இடம் உறுதியானது. வீரர்கள் அவரது பேச்சை கேட்கிறார்கள். உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு இதுவே சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். சிலமுறை இரண்டு வீரர்களுக்கு இந்த உலகக் கோப்பையை கடைசியாக இருக்கும் என்று பேச்சு எழும். தற்பொழுது இந்தியாவுக்கு அப்படியான நிலை இருக்கிறது என்று உணர்கிறேன். இந்தியாவுடன் அனைத்து துறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பாகிஸ்தான் இந்த முறை உலக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் மிக அதிகம்!” என்று கூறியிருக்கிறார்!

விராட் கோலிக்கு நடுவில் இரண்டு வருடங்கள் சரியாக அமையாமல் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன்பு வரை அவருக்கு மோசமான சீசன் என்று எதுவுமே கிடையாது. அதேசமயத்தில் தன்னுடைய மோசமான சீசனில் இருந்து வெளிவந்த உடனேயே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை காட்டினார். ஆனால் அதே டி20 உலகக்கோப்பையில் பாபர் ஆசம் எதுவுமே செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!