“இந்திய டீம் நல்லா விளையாடறதுக்கு காரணம் எனக்கு தெரியும்? நான் நேர்ல பார்த்தேன்!” – முரளி விஜய் வியப்பான பேச்சு!

0
1473
Vijay

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் மும்பை மைதானத்தில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு செயல்பாடு மிக அபாரமாக இருந்தது. மேலும் மைதானத்தில் அணிக்குள் இருந்த உற்சாகமும் ஒற்றுமையும் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

- Advertisement -

தொடர்ச்சியாக இந்திய அணியின் வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடி வெற்றிகளை இந்த உலகக் கோப்பை தொடரில் குவித்து கொண்டு வருகிறார்கள்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாத ஒரே அணியாக இந்திய அணி மட்டுமே இருந்து வருகிறது. அணிக்குள் சிறப்பான சூழல் காணப்படுகிறது.

மேலும் மைதானத்தில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பான இணக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அது விக்கெட் கொண்டாட்டங்களின் போது தெளிவாக தெரிகிறது. மேலும் விராட் கோலி முக்கியமான நேரங்களில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனை சொல்வதையும் மைதானத்தில் பார்க்க முடிந்தது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் யார் நன்றாக பீல்டிங் செய்தார்கள் என்று, பீல்டிங் பயிற்சியாளர் மூலம் அணியில் வித்தியாசமான முறையில் விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வீரர்கள் வெற்றி தோல்விகளை தாண்டி மகிழ்வாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கான சூழல்கள் உருவாக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசி உள்ள தமிழக வீரர் முரளி விஜய் கூறும் பொழுது “இந்திய வீரர்களுக்கு போட்டி குறித்த எந்த அழுத்தமும் கிடையாது. அவர்கள் மிகவும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். மேலும் அணிக்குள் ஒவ்வொரு வீரர்களிடமும் நல்ல உறவும் ஒற்றுமையும் இருக்கிறது.

இலங்கைப் போட்டியின் போது மும்பை ஹோட்டலில் லிஃப்டுக்காக காத்திருந்தபொழுது உள்ளே இருந்த ரோகித் சர்மா என்னை உள்ளே இழுத்துக் கொண்டார். அந்த ஒட்டு மொத்த அணியுடன் சேர்ந்து இருப்பது மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் வெற்றிக்கு காரணம்!” என்று கூறியிருக்கிறார்!