19.1 ஓவர்.. மீண்டும் தினேஷ் கார்த்திக் அணி வெற்றி.. முன்னாள் சிஎஸ்கே வீரர் அசத்தல்.. லெஜண்ட்ஸ் கிரிக்கெட்

0
1784
LCL

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான லெஜென்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடரின் ஐந்தாவது போட்டியில் இயான் பெல் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார் அணிகளும் மோதின.

இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான சூப்பர் ஸ்டார்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட் தொடரான லெஜன்ட் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்தியா கேப்பிடல்ஸ் அணி மிடில் வரிசை பேட்ஸ்மேன்களான டன்க் மற்றும் நர்ஸ் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் அந்த அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இதில் பென் டன்க் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்தார்.

அவருடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்த நர்ஸ் 24 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 40 ரன்கள் குவித்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் 36 ரன்கள் குவித்தார். இதில் பந்துவீச்சில் கரியா இரண்டு விக்கட்டுகளும் ரசாக் ஒரு விக்கட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரரான பவன் நெகி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தினேஷ் கார்த்திக் தலைமையிலான அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 36 ரன்கள் அடித்த நிலையில் வெளியேற, கோஸ்வாமி 17 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் டக் அவுட் ஆகியும் வெளியேறினார்கள். அதற்குப் பிறகு அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பவான் நெகி களம் இறங்கினார்.

சிஎஸ்கே முன்னாள் வீரரான நெகி 26 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர் என 146 ஸ்ட்ரைக் ரேட்டில் 38 ரன்கள் குவித்தார். அதன் பிறகு கேப்டன் கார்த்திக் ஐந்து ரன்னில் வெளியேறினாலும் காந்தி சிறப்பாக விளையாடி 38 ரன்கள் குவிக்க இறுதியாக கரியா 18 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 23 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க : 21 மாதங்கள் ஓய்வு.. பண்ட் வெறும் 1 போட்டியில் 6வது டெஸ்ட் ரேங்க்.. காரணம் என்ன.?

இதனால் இறுதியாக சவுத்தர்ன் அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்த நிலையில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தினேஷ் கார்த்திக் அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்ட காந்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

- Advertisement -