ஐபிஎல் 2024

6 அணிகள்.. 4842 ரன்கள்.. ஐபிஎல்-ல் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக்.. நெகிழ்ச்சியான பிரியாவிடை

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியுடன், ஆர்சிபி அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றிருக்கிறார். ஆர்சிபி அணி தோல்வி அடைந்ததால், அவருடைய ஒட்டுமொத்த கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

இன்று ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் தினேஷ் கார்த்திக் 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 17 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். முதன் முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் இறுதியாக ஆர்சிபி அணிக்கு விளையாடி ஓய்வு பெற்றிருக்கிறார்.

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை, குஜராத் லயன்ஸ், கொல்கத்தா மற்றும் பெங்களூரு என மொத்தம் ஆறு அணிகளுக்கு விளையாடி இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற இவரது நீண்ட வருட கனவு கடைசி வரை நிறைவேறவே இல்லை என்பது சோகம்.

இவர் மொத்தம் 257 போட்டிகளில் 4842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் மொத்தம் 22 அரை சதங்கள் அடக்கம். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தினேஷ் கார்த்திக் பெயரும் இடம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டு, அந்த ஆண்டு 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு விளையாடவும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாங்க சும்மா திரும்பி வரல.. எங்க டீம் ஜெயிக்கிறதுக்கு இந்த ரெண்டு விஷயம் முக்கிய காரணமா இருக்கு – அஸ்வின் பேட்டி

2023ஆம் ஆண்டு அவருக்கு மட்டும் இல்லாமல் மற்ற ஆர்சிபி அணிக்கும் சரியாக அமையவில்லை. அதே சமயத்தில் இந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக 15 போட்டிகளில் பினிஷராக 326 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்று ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றுக் கொண்ட தினேஷ் கார்த்திக்குக்கு விராட் கோலி உட்பட ஆர்சிபி அணியினர் அணிவகுத்து நின்று வாழ்த்தியும் மரியாதையும் செய்தனர். தமிழகத்திலிருந்து வந்த அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவு இன்று நெகிழ்ச்சிகரமாக களத்தில் அமைந்திருந்தது.

Published by