மீண்டும் பினிசிங்கில் பிரமாதப்படுத்திய தினேஷ் கார்த்திக் !

0
61
Dinesh karthick

வெஸ்ட் இன்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் 3-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான அணியில் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணிக்குத் திரும்பினார்கள். மேலும் ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ் இருவரும் மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு வந்திருக்கிறார்கள்!

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று டிரினிடாட்டால் பிரையன் லாரா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் நம்பர் 3ல் ஸ்ரேயாஷ் ஐயரும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்து வீச்சாளர்களாக ஆர்.அஷ்வினும், ரவி பிஷ்னோயும் இடம்பெற்றனர்!

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணிக்குத் துவக்கும் தர புதுமுயற்சியாக கேப்டன் ரோகித் சர்மாவோடு சூர்யகுமார் யாதவ் வந்தார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்க்க, சூர்யகுமார் 24 [16] ரன்களில் வெளியேறினார்.

இதற்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மாவோடு இணைந்த ஸ்ரேயாஷ் 0, ரிஷான் பண்ட் 14, ஹர்திக் 1 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களில் வெளியேற, 16 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது!

இதையடுத்து கடைசி நான்கு ஓவர்களுக்கு இணைந்த தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின் ஜோடி அதிரடியில் மிரட்டியது. கடைசி 25 பந்தில் மட்டும் இந்த ஜோடி 52 ரன்களை கொண்டுவந்தது. குறிப்பாக தினேஷ் கார்த்திக்கின் வழக்கமான பினிசர் வெளியே வந்தார். அவர்அவர் 19 பந்துகளில் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகளோடு 215.78 ஸ்ட்ரைக்ரேட்டில் அதிரடியாய் 41 ரன்களை நொறுக்கினார். ஒருமுனையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஒத்தழைப்பு தந்த ஆர்.அஷ்வின் ஒரு சிக்ஸரோடு பத்துப் பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு, கடைசியில் யாரும் எதிர்பாராத விதமாக 190 ரன்களை குவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான பினிசிங் அதிரடி ஆட்டம் இந்த ஸ்கோருக்கு இந்திய அணியை நகர்த்தி கொண்டுவந்துள்ளது!