“தொடர்ந்து 3 டக் அடிச்சிருந்தாலும் இவர் இல்லாம உலக கோப்பைக்கு போகாதிங்க” – இந்திய அணி நிர்வாகத்துக்கு தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்!

0
566
DK

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடர் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. தற்பொழுது இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும், உலகக் கோப்பைக்கு தயாராகும் விதத்தில் தங்களது ஒரு நாள் கிரிக்கெட் திட்டங்களை வகுத்து வருகின்றன!

இந்த வகையில் இந்திய அணி அடுத்த இரண்டு நாட்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடரில் சில வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும்.

- Advertisement -

இந்திய அணியின் மிடில் வரிசையில் விளையாடி வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயங்களால் அணியில் இடம்பெறாமல் இருக்கின்ற காரணத்தினால், இவர்களது இடத்தில் யாரிடம் பெறுவார்கள் என்பதற்கான போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தில் இசான் கிஷானும், விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று மிடில் வரிசை பேட்ஸ்மேனுக்கான இடத்தில் சஞ்சு சாம்சனும் இருக்கிறார்கள். அதே சமயத்தில் முதல் விக்கெட் கீப்பராக மிடில் வரிசையில் விளையாடும் அணியில் இடம் பெறக்கூடியவராக கேஎல் ராகுல் இருப்பார். இந்த அணியில் சூரிய குமாருக்கு இடம் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் தற்பொழுதைய கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “என்னைப் பொறுத்தவரை தேர்வாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கக்கூடிய வீரராக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அவர் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் அவர் தன் திறமையை முழுதாக வெளிப்படுத்த வில்லை. ஆனாலும் கூட அவர் மிகச்சிறந்த வீரர்.

கடந்த முறை உள்நாட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மூன்று முறை தொடர்ந்து முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதற்குப் பிறகு அவரால் என்ன செய்ய முடியும்? என்பதை ஐபிஎல் தொடரில் நமக்கு காட்டினார். அவர் விளையாட்டை ஒரே ஆளாக ஒரே மூச்சில் எடுத்துச் செல்லக் கூடிய வீரர்.

சூரியகுமார் யாதவை பொருத்தவரை என் மனதில் டி20 கிரிக்கெட்டில் அவர் மிக தலைசிறந்த வீரர். அவர் வருகின்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. நான் இதை மிக உறுதியாக கூறுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடக்கும் ஒன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடக்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடர் என இந்த இரண்டு தொடர்களும் இந்திய அணி ஒரு நாள் உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்குவதில் முக்கிய தொடர்களாக இருக்கும். இதில் வாய்ப்பைப் பெற்று யார் எந்த அளவில் செயல்படுகிறார்களோ அதைப் பொறுத்து வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -