தினேஷ் கார்த்திக் பேர்ல இப்படியொரு ரெக்கார்ட்டா. மோசமான ரெக்கார்ட் லிஸ்டில் ரோகித் சர்மாவை காப்பாற்றிவிட்டு, முதலிடம் பிடித்த தினேஷ் கார்த்திக்!

0
481

குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம், மோசமான சாதனையில் ரோகித் சர்மாவை பெண்ணுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வரும் லீக் போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய போட்டியில் ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் டு ப்ளசிஸ் இருவரும் ஓபனிங் இறங்கினர்.

- Advertisement -

மிகச் சிறந்த பார்மில் இருந்த டு பிளசிஸ் இப்போட்டியில் 28 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி-டு பிளசிஸ் ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. அடுத்து உள்ளே வந்த மேக்ஸ்வெல் 11 ரன்கள், லோம்ரர் ஒரு ரன் அடித்து அவுட் ஆகினர்.

ஆர்சிபி அணிக்கு மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை பிரேஸ்வெல் அதனை சரிசெய்து விராட் கோலியுடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. பிரேஸ்வெல் 26 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வந்த முதல் பந்திலையே டக் அவுட் ஆனார். இந்த வருட ஐபிஎல் சீசனில் நான்காவது முறையாக தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகிறார்.

- Advertisement -

ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 17வது முறையாக தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகிறார். இதன் மூலம் 16 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மாவை பின்னுக்குத்தள்ளி, மோசமான ரெக்கார்ட் லிஸ்டில் முதலிடம் பிடித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ஏற்கனவே பினிஷிங்கில் சரியாக செய்யவில்லை என்கிற விமர்சனங்கள் தினேஷ் கார்த்திக் மீது வந்துகொண்டிருக்கும் நிலையில், இப்படி முக்கியமான போட்டியில் டக் அவுட் ஆனது இன்னும் விமர்சனத்தை பெற்றுத்தந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டெக் அவுட் ஆனவர்கள் பட்டியல்

  1. தினேஷ் கார்த்திக் – 17 முறை
  2. ரோகித் சர்மா – 16 முறை
  3. மந்தீப் சிங் – 15 முறை
  4. சுனில் நரேன் 15 முறை

ஒரு சீசனில் அதிக டக் அவுட் ஆனவர்கள்

  1. ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 2023 – 5 முறை
  2.  ஹெர்ஷல் கிப்ஸ் (டெக்கான் சார்ஜர்ஸ்) – 2009 – 4 முறை
  3.  மிதுன் மன்ஹாஸ் (புனே வாரியர்ஸ் இந்தியா) – 2011 – 4 முறை
  4.  மணீஷ் பாண்டே (புனே வாரியர்ஸ் இந்தியா) – 2012 – 4 முறை
  5.  ஷிகர் தவான் (டெல்லி கேபிடல்ஸ்) – 2020 – 4 முறை
  6.  இயோன் மோர்கன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – 2021 – 4 முறை
  7.  நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்) – 2021 – 4 முறை